அழகான கண்களைப் பெற

எவ்வளவு நாட்களுக்குத் தான் மீனாவின் கண்களை மட்டும் வர்ணித்துக் கொண்டிருப்பது, நம்முடைய கண்களையும் இப்படி யாராவது வர்ணிக்க ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டாமா? எப்படி என்று தானே கேட்கின்றீர்கள், அழகுச் சாதனப்பொருட்கள் விற்க்கும் கடைக்கு போங்கள். அங்கு விற்க்கும் போலியான இமையின் இரப்பையை FALSE EYE LASHES வாங்கி வந்து அணிந்துக் கொள்ளுங்கள். கீழே விழுந்து விடும் என்ற பயம் வேண்டாம். நீங்கள் பிடித்து இழுத்தால் தான் அதை அகற்ற முடியும். முதலில் அதை ஒட்ட கொஞ்சம் கடினமாயிருக்கும். ஒரிரு முறைக்கு பிறகு சுலபமாக பழகிக் கொள்வீர்கள்.
உங்களின் இமையின் அளவிற்க்கு ஏற்ப்ப வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது கத்தரித்து உபயோகிக்கலாம்.பல விதமான டிசைன்களில் கிடைக்கின்றது. முதலில் தனித் தனியான முடியுள்ள டிசைனாக பார்த்து வாங்கிக் கொண்டால், இமையின் ஓரத்தில் ஒட்டி பழகிக் கொண்டு பிறகு பிடித்த மாதிரியாகவோ அல்லது அதையே அணிந்துக் கொள்ளலாம்.
என்னத்தான் கண்கள் அழகாக இருந்தாலும் இமையில் முடி அடர்த்தியாக இல்லை யென்றால் அழகு அடிபட்டு விடும். கொட்ட வாய்ப்பிருக்கின்றதே ஒழிய அது ஓரளவிற்க்கு மேல் வளராது. ஆகவே கிடைக்கும் இது போன்ற பொருட்களை பாதுக்காப்புடன் அணிந்து பெண்கள் கண்ணழகை கூட கூட்டிக்கொள்ளலாம்.என்ன அதற்க்குள் தயாராகி விட்டீர்களா? கொஞ்சம் இதையும் கேட்டு விட்டு போங்கள், அதாவது இந்த சாதனத்தை பற்றி தெரிந்துக் கொள்ள சாதாரணக்கடையில் கிடைக்கும் பொருட்களுக்கு பதிலாக மருந்துக் கடையிலுள்ள காஸ்மடிக் பகுதிக்கு சென்று பார்த்து வாங்கினால், தரமான பொருளாகக் கிடைக்கும். போகின்ற வேகத்தைப் பார்த்தால் வாங்கி விட்டு தான் திரும்புவீர்கள் போல் தெரிகின்றது. நன்றி.

மனோகரி மேடம் FALSE EYE LASHES சென்னையில் எங்கு கிடைக்கும்.

எனக்கு சினேகா கண் தான் பிடிக்கும்,

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

மேலும் சில பதிவுகள்