தேதி: May 19, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
நிலக்கடலை - 100 கிராம்
மிளகாய் வற்றல் - 2
இஞ்சி - சிறுத் துண்டு
உப்பு - தேவைக்கேற்ப
புளி - சிறிய கோலி குண்டு அளவு
தாளிக்க :
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
முதலில் வாணலியில் மிளகாய் வற்றலை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு நிலக்கடலையை போட்டு வறுத்து எடுத்து தோல் நீக்கிக் கொள்ளவும். ( அல்லது தோல் நீக்கி விட்டு வறுக்கவும் செய்யலாம் ).

இஞ்சியை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் நிலக்கடலை, மிளகாய் வற்றல், புளி, இஞ்சி, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.

தாளித்தவற்றை சட்னியில் சேர்த்து பரிமாறவும். சுவையான நிலக்கடலை சட்னி தயார்.
