வெஜிடபுள் இட்லி

தேதி: May 19, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ரீட்டா ஜெப மேரி அவர்கள் வழங்கியுள்ள வெஜிடபிள் இட்லி என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ரீட்டா அவர்களுக்கு நன்றிகள்.

 

புழுங்கல் அரிசி - 250 கிராம்
பச்சரிசி - 125 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
எண்ணெய் - 50 மி.லி
காரட் - 100 கிராம்
கோஸ் - 100 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 5
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

முதல் நாள் மாலை புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக ஊற வைத்து இட்லி மாவு அரைப்பது போன்று அரைத்து அதில் தேவையான உப்பு சேர்த்து கலக்கி மூடி வைத்து விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய காய்கறிகளை அதில் சேர்த்து வதக்கவும்.
காய்கறி நன்றாக வதங்கியதும், இட்லி மாவில் கொட்டி நன்றாக கலக்கி வைக்கவும்.
மாவை இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
சூடான சுவையான வெஜிடபுள் இட்லி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்லா இருக்கு.எல்லா குறிப்பும் சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

உங்க வெஜிடபுள் இட்லி செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது மிக்க நன்றி