மீன் ரோஸ்ட் - சுலப முறை

தேதி: May 20, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.3 (3 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. பாக்கியவதி அவர்களின் மீன் ரோஸ்ட் குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய பாக்கியவதி அவர்களுக்கு நன்றிகள்.

 

மீன் - அரைக் கிலோ
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்புத் தூள் - தேவையான அளவு


 

பிடித்தமான வகை மீனை வாங்கிச் சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
மேற்கூறிய மசாலாத் தூள்கள் மற்றும் உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீரில் கலந்து மீன் துண்டுகள் மீது தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி சூடேறியதும் மீன் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
2 முட்டைகளை அடித்து மீன் துண்டுகளை அதில் நனைத்து எடுத்தும் வறுக்கலாம். நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழைகளைத் தூவி, எலுமிச்சை சாறு கலந்து பரிமாறலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்