கொத்தமல்லிச் சட்னி

தேதி: May 20, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட செல்வி. ரம்யா அவர்களின் கொத்தமல்லிச் சட்னி குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ரம்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

கொத்தமல்லி - 2 கட்டு
தேங்காய் - ஒரு மூடி
பச்சைமிளகாய் - 4
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
பொட்டுக்கடலை - ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி


 

கொத்தமல்லியை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காயுடன் பொட்டுக்கடலை, மிளகாய், புளி, பெருங்காயம் முதலியவற்றைச் சேர்த்து அரைக்கவும்.
பாதி அரைப்பட்டதும் அதனுடன் சுத்தம் செய்து ஆய்ந்து வைத்திருக்கும் மல்லித்தழைகளைச் சேர்த்து நன்கு மையாக அரைத்தெடுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதில் சேர்க்கவும். சுவையான கொத்தமல்லிச் சட்னி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்