தேதி: May 21, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பருத்தி விதை - 100 கிராம்
வெல்லம் - 75 கிராம்
சுக்கு - ஒரு துண்டு
மில்க்மெய்ட் - அரை கப்
கோவா - 100 கிராம்
நெய் - தேவையான அளவு
பருத்தி விதையுடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 5 மணிநேரம் ஊற வைக்கவும்.

வெல்லத்தை துருவி வைக்கவும். சுக்கை பொடியாக்கவும்.

ஊறிய விதையை அலசி க்ரைண்டரில் போட்டு அரைத்து மெல்லிய துணியில் வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் பருத்தி பாலை ஊற்றி மேலும் 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு மடங்காக குறுகும் அளவிற்கு கொதிக்க விடவும்.

பருத்தி பால் கொதித்ததும் கோவா சேர்க்கவும்.

அதன் பின்னர் பாலுடன் மில்க் மெய்ட் சேர்த்து கலந்து விடவும்.

பிறகு பொடித்த வெல்லம் சேர்த்து கலந்து வரும் வரை சேர்த்து கிண்டி விட்டு சுக்கு பொடி போட்டு கிளறி விடவும்.

கலவை கெட்டியானதும் நெய் ஊற்றி இறக்கவும்.

முந்திரி துருவி சேர்த்தால் பருத்திப்பால் அல்வா ரெடி.

Comments
ரேவ்'ஸ்
அல்வா சூப்பர். ஒட்டாம வந்துச்சா? அல்வா மாறியே இருந்துச்சா இல்ல எப்டி இருந்துச்சி? அருமை ரேவ்'ஸ். சூப்பரா அல்வா குடுத்து இருக்கீங்க.
எல்லாம் சில காலம்.....
team
குறிப்பை வெளியிட்ட அட்மின்& அறுசுவை டீம் மிக்க நன்றி.
Be simple be sample
பாலா
பாலா உங்களுக்கு ரொம்ப குசும்பு. இது ஒட்டாம வந்துச்சு, டேஸ்ட்டாவும் இருந்துச்சு அல்வா மாதிரியே. தான்க்யூ
Be simple be sample
Gova enbathu enna??
Gova enbathu enna??
Abi
Milk kova there is two types with sugar and without sugar, if u don't know how to do u can get it in dairy or ghee stores
Oh ok..thank you..
Oh ok..thank you..
Pal kova use panalama
Pal kova use panalama
Abi
Pal kova than sis without sugar