தேதி: May 22, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. காந்திசீதா அவர்களின் காரமல் பனானா வித் ஐஸ்கீரிம் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய காந்திசீதா அவர்களுக்கு நன்றிகள்.
வாழைப்பழம் - ஒன்று
சர்க்கரை - 3 தேக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
ஐஸ்க்ரீம் - விருப்பமான வகை
ஜெல்லி - 6 துண்டுகள்
வாழைப்பழத்தை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

தவாவை வைத்து வெண்ணெயை போட்டு உருக்கிக் கொள்ளவும்.

வெண்ணெய் உருகியதும் வாழைப்பழத்தை போட்டு பொன்னிறமாக வறுத்து தட்டில் எடுத்து வைக்கவும்.

பின்னர் வெண்ணெயில் சர்க்கரையை சேர்த்து கரைய வைத்து கேரமல் தயாரித்து எடுத்துக் கொள்ளவும்.

அந்த கேரமல் கலவையை வாழைப்பழத்தின் மேல் ஊற்றவும்.

அதன் பிறகு பரிமாறும் கோப்பையில் 2 காரமல் கலந்த வாழைப்பழத் துண்டுகள், அதன் மேல் 2 ஜெல்லி, அதில் ஐஸ்க்ரீம் வைக்கவும். மீண்டும் அதே போல் காரமல் கலந்த வாழைப்பழம், ஜெல்லி, வைத்து பரிமாறவும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் விரும்பி உண்பார்கள். எல்லா வகை பழங்களிலும் செய்யலாம்.

Comments
Kitchen Queen
I like this desert Revathy.
Ideal for kids party :))