வடா பாவ்

தேதி: May 22, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. விஜி அவர்களின் வடா பாவ் என்கின்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய விஜி அவர்களுக்கு நன்றிகள்.

 

வடா செய்வதற்கு :
உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்தது - ஒரு கப்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - சின்ன துண்டு
பூண்டு - ஒன்று
லெமன் ஜூஸ் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - அரை தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப
கொத்தமல்லித் தழை - ஒரு பிடி
எண்ணெய் பொரிக்க - கால் லிட்டர்
மாவு கரைக்க:
கடலை மாவு - ஒரு கப்
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப
பாவ்விற்கு:
சதுரமான பன் - 6
புதினா சட்னி - 2 தேக்கரண்டி


 

வடா செய்ய தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக கலந்து சிறிது நேரம் வைக்கவும்.
மாவாக கரைக்க வேண்டிய பொருட்களை ஒன்றாக சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
வடா மசாலாவை எடுத்து உருண்டைகளாகவோ அல்லது வட்டமாகவோ தட்டி கடலை மாவு கரைசலில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
புதினா சட்னி அவரவர் விருப்பத்திற்கேற்ப அரைத்துக் கொள்ளவும்.
வடா பாவ் பரிமாற : பன்னை இரண்டாக நறுக்கி ( பாவ் பாஜிக்கு செய்வது போல்) அதில் புதினா சட்னியை இரு பக்கங்களிலும் தடவி இந்த சூடான வடாவை ஒரு பக்கத்தில் வைத்து அடுத்த ஸ்லைஸால் மூடி உடனே பரிமாறவும்.
சுவையான வடா பாவ் தயார். சூடாக பரிமாறவும். இதை பர்த்டே, கெட் டு கெதர், டின்னர் பார்ட்டிகளுக்கு செய்து அசத்தலாம்.

இந்த வடா பாவ் மும்பை நகரில் எல்லோராலும் விரும்பி சாப்பிட கூடியது.

இந்த கலவை கெட்டியாக இருக்க வேண்டும். சோடா உப்பு (விருப்பப்பட்டால்) சேர்த்தால் வடா நன்றாக உப்பி வரும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் ரேவா. அசத்தல். பார்ட்டிய‌ கல‌ கட்ட‌ வைக்க‌ வேண்டியது தான். வாழ்த்துக்கள் கிட்சன் குயின்.

எல்லாம் சில‌ காலம்.....

வடா பாவ் அருமை.6 குறிப்பும் சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.