மழலை பேசும் திறன்

தோழி௧ளே எனது மகளுக்கு 1வயதும் 5மாதங்௧ளும் ஆகிறது
அவள் பேசும் வார்த்தை௧ள் அம்மா,அப்பா, தாத்தா,பாலுக்கு பா, தண்ணி, காகா, சில சமயங்௧ளில் அவள் செய்கையின் மூலம் எனக்கு புரிய வைக்கிறாள் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது

சுறுசுறுப்பாகவும்,, உற்சா௧மா௧வும் இருப்பாள்
குறும்புதனத்திற்கும் பஞ்சமில்லை

எனது மகளுக்கு நான் பேசும் திறனை வளர்க்௧ ஆசைபடுகிறேன்
நான் ஏதாவது சொல்லிக்கொடுத்தால் நான் உச்சரிக்கும் வார்த்தையை மட்டுமே ௧வனிக்கிறாளே தவிர சொல்ல மாட்டேன்கிறாள் சிரிப்பு தான்எஅவளது பதிலாகும்

அவளது பேச்சுத்திறனை வளர்ப்பது எப்படி
ஐடியா கொடுங்௧ள் தோழிகளே

//41/2 வயது ஆகிறது.// போன வருஷமும் இதையேதான் சொன்னார்கள் என்கிறீர்கள். அடியோடு பேசவில்லை என்றால் யோசிக்கலாம். ஆசிரியருக்குப் பதில் சொல்கிறார் என்றால் விட்டுவிடுங்கள். இன்னும் குழந்தை முழு வளர்ச்சி அடைந்துவிடவில்லை. காலம் இருக்கிறது. இப்போது இதைப் பற்றிக் குழந்தை முன் பேச்சு எடுப்பது எதிர்மறை விளைவுகளைக் கொடுக்கலாம். இல்லாத ஒரு பிரச்சினை, இருப்பதாக அதன் மனதில் பதிந்துவிடும்.

//பள்ளியில் மட்டும் அமைதியாக இருக்கிறாள்.// அங்கே பாடசாலை எப்படி என்று தெரியவில்லை. //பள்ளியில் மற்ற பிள்ளைகள் போல் பேசவைப்பது எப்படி?// அது ஆசிரியர்கள் கையில் இருக்கிறதோ! :-) பாடசாலையில் 'நல்ல பிள்ளையாக' இருக்க வேண்டும் என்னும் நினைப்பிலும் குழந்தை அப்படி இருக்கலாம். பாடசாலையில் மட்டும்தான் பிரச்சினை என்றால்... அங்கு அவரால் இயல்பாக இருக்க முடியவில்லை. பயப்படுகிறாரோ! ஆசிரியர்கள் பக்கமிருந்துதான் தீர்வு கிடைக்க வேண்டும். நீங்கள் எதுவும் செய்ய இயலாது அல்லவா? க்ரூப் ஆக்டிவிட்டீஸ் இருக்கும் சமயம் சந்தோஷமாகப் பங்கேற்பார் என்று நினைக்கிறேன். பள்ளிக்குப் போகப் பிடிக்கிறது என்கிறீர்கள். பெரிதாக யோசிக்கத் தேவயில்லை என்று நினைக்கிறேன். வீட்டில் சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது பாடசாலையில் என்ன நடக்கிறது என்பதை மட்டும் விசாரித்துக் கொள்ளுங்கள். இன்னும் இரண்டு வருடம் போகச் சரியாகிவிடுவார்.

முடிந்தால் விடுமுறைகளில் 'ஹாலிடே ஸ்கூல்' போல எங்காவது சேர்த்து விடுங்கள். அங்கு எப்படிப் பழகுகிறார் என்பதையும் பாருங்கள்.

ஆசிரியர் கூட்டத்தில் சில குழந்தைகளைப் பற்றிப் பேச்சு வரும் போது, ஒரே குழந்தையைப் பற்றி ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு விதமாக கருத்துச் சொல்லுவார்கள். கேட்க ஆச்சரியமாக இருக்கும். ஒரு ஆசிரியை வெகு நல்ல அபிப்பிராயம் சொல்லுவார்; இன்னொருவர், 'அட! அப்படியா! என் வகுப்பில் நல்ல பிள்ளைதான், ஆனால் வேலை எதுவும் நடப்பதில்லை,' என்பார். குழந்தைகளுக்கும் சந்தர்ப்பத்துக்கு (மனிதர்களுக்கு) ஏற்றபடி நடக்கத் தெரியும். மனதுக்குப் பிடித்தவர்கள் முன்னால் ஒரு விதமாகவும் மற்றவர்கள் முன்னால் வேறு விதமாகவும் நடக்க அவர்களால் முடியும்.

‍- இமா க்றிஸ்

ithu oru problem nu yosikatheenga.School la pesavillai entral neraya reason irukalam.koocham,payam ithu mathiri irukalam allava??.ella idathilum peasavillai entral than yosikka vendum.Nan kuda 12th paddikkum varai koocha subavam karanamaga en aunty kita mattum pesave matten,yellarum thittuvanga.apuram college pona pinpu automatically pesiten

நீங்கள் கூறுவது சரிதான் இமா அம்மா , போன வருடம் பள்ளிக்கு சென்ற போது அவளுக்கு language problem இருந்தது , அதனால் தான்போக போக சரியாகிவிடும் என்று teacher கூறினார்கள் . ஆனால் தற்போது english நன்றாக பேசுகிறாள் . நான் அவளிடம் மற்றவர்கள் போல் நீஉம் class room la பேசு என்றதற்கு teacher அமைதியாக இருக்க சொன்னார்கள் அதான் நான்பேச மாட்டான் என்றுகூறுகிறாள் . Playground சென்றால் கூட மற்றவர்கள் வந்து கூபிட்டால் தான் அவர்களோடு விளையாடுகிறாள் , இல்லையென்றால் தனியாக விளையாடுகிறாள்.

// teacher அமைதியாக இருக்க சொன்னார்கள் // :-) எப்பொழுதும் ஒரு வசனத்திற்குப் பல விளக்கங்கள் இருக்கும். சில குழந்தைகளுக்கு 'வேண்டாம்' என்றால் சொன்னதற்கு எதிர்மாறாகச் செய்யாவிட்டால் தலை வெடித்துவிடும். சிலர் முகத்திற்கு முன் நல்ல பிள்ளைகளாக இருந்துவிட்டு செய்யக் கூடாததைத் திருட்டுத் தனமாகச் செய்வதை ரசிப்பார்கள். சிலர் சொன்னபடி நடக்க முயற்சிப்பார்கள்; முடியாது. :-) உங்க பொண்ணு டீச்சர் சொன்னதை வேதவாக்கா எடுத்திருக்காங்க.

//மற்றவர்கள் போல் நீஉம் class room la பேசு என்றதற்கு// பெரியவர்களானாலும் பேச்சு சொல்லி வராது. அது இயல்பாக வர வேண்டும். அதற்கேற்ற சூழல் அமையும் போது இலகுவாகப் பேசுவாங்க.

//மற்றவர்கள் வந்து கூபிட்டால் தான் அவர்களோடு விளையாடுகிறாள்// இது உங்கள் குழந்தையின் இயல்பு. நீங்கள் சொல்லி மாற்ற முடியாது. அடிக்கடி வெளியே அழைத்துப் போங்க. போற இடம் குழந்தைக்குப் பிடிச்ச இடமாக இருக்கட்டும். நீங்க சர்ந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுங்க. மெதுவா தானா மாறுவாங்க.

‍- இமா க்றிஸ்

thnk u imma madam

மேலும் சில பதிவுகள்