மிதிவெடி

தேதி: May 26, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

திருமதி. துஷ்யந்தி அவர்களின் மிதிவெடி குறிப்பினை பார்த்து இமா அவர்கள் முயற்சி செய்த‌ குறிப்பு இது.

 

உருளைக்கிழங்கு - 500 கிராம்
பச்சைமிளகாய் - 2
முட்டை - 5 + 1
தேங்காய்ப் பால் - கால் கப்
வெங்காயம் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி
லெமன் சாறு - ஒரு மேசைக்கரண்டி
பூண்டு - 2 பற்கள்
உப்பு - சுவைக்கு ஏற்ப
ஸ்ப்ரிங் ரோல் ஷீட்ஸ் - 20
ரஸ்க் தூள் - ஒரு கப்
எண்ணெய் - பொரிக்க


 

தேவையானவற்றை அனைத்தையும் தயார்படுத்தி எடுத்து வைக்கவும்.
5 முட்டைகளை மட்டும் அவித்து, ஓடு நீக்கி இரண்டாக வெட்டி வைக்கவும்.
கிழங்கை, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து தோலுரித்து துண்டுகளாக்கி வைக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலையை அரிந்து வைக்கவும். பூண்டை சிறிதாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.
ஓரளவு வதங்கியதும் உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து தூள் வாசனை போக வதக்கி வேக விடவும்.
உருளைக்கிழங்குத் துண்டுகளை சேர்த்து, அரைக் கோப்பை தண்ணீர் ஊற்றி சில நிமிடங்கள் வேக விட்டு, பாலைச் சேர்க்கவும். இறுதியாக லெமன் சேர்த்துக் கலந்து மேலும் சிறிது கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டை வெண்கருவை அடித்து வைக்கவும். அகலமான ஒரு தட்டில் ரஸ்க் தூளைப் பரப்பி வைக்கவும்.
இரண்டு ரோல் ஷீட்களை ஒன்றாக வைத்து, அதன் நடுவே பாதி முட்டையையும் சிறிது கிழங்குக் கலவையை வைக்கவும்.
நீள்சதுரமாக வரக்கூடியதாக மடித்து, ஓரங்களை அடித்து வைத்த முட்டையைத் தடவி ஒட்டி விடவும்.
அனைத்து மிதிவெடிகளையும் ஒன்றாகத் தயார் செய்து வைக்கவும்.
ஒவ்வொன்றாக முட்டையில் நனைத்து ரஸ்க் தூளில் புரட்டி எடுக்கவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, தயார் செய்து வைத்துள்ள மிதிவெடிகளை மிதமான தீயில், ஆறு புறமும் திருப்பிப் போட்டு வேக விட்டு எடுக்கவும்.
மிதிவெடிகளை இரண்டிரண்டாகப் போட்டால், ஓரங்களை வேகவிடும் போது, இடுக்கியால் பிடித்துக் கொள்ளாமல் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பது போல விட்டு வேக விடலாம்.
இவற்றில் எண்ணெய் அதிகம் இராது. கிச்சன் பேப்பரில் வைத்தால் இருக்கும் மீதி எண்ணெயையும் அது உறிஞ்சி விடும்.
சாஸ் அல்லது கெச்சப்புடன் சூடாகப் பரிமாறவும்.

பொரிப்பதற்கு, தட்டையான கரண்டியோடு கூடவே பெரிய இடுக்கி ஒன்றும் இருந்தால் வசதியாக இருக்கும்.

பொரிக்கும் சமயம், முதலில் பெரிய பக்கங்களிரண்டையும் வேகவிட்டுக் கொள்ளவும். அடுத்து, நீளமான பக்கங்களையும் கடைசியாக சிறிய பக்கங்களையும் வேக விடவும். சிறிய பக்கங்களை ஒரு முறை பாத்திரத்தோடு அழுத்தித் தேய்த்தால் தட்டையாகிவிடும்.

சமையலுக்கு நடுவே ஒவ்வொரு முறையும், பொரியற்சட்டியில் மீந்திருக்கும் எண்ணெயையும் ரஸ்க் தூளையும் துடைத்து எடுக்க வேண்டும். இதற்குத் தயாராக அருகே கிச்சன் பேப்பரும் ஒரு பாத்திரமும் வைத்துக் கொள்ளவும்.

ரோல் ஷீட்டுக்குப் பதில், மைதா மாவுடன் சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்குக் கரைத்து தோசையாக வார்த்துப் பயன்படுத்தலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரெம்ப அழகா இ௫க்கு, டேஸ்ட் ரெம்ப நல்லா இ௫க்கும் னு நினைக்கிறேன். சூப்பரோ சூப்பர். ஸ்ப்ரிங் ரோல் ஷீட்ஸ் எங்க கிடைக்கும்??.

ரம்யா ஜெயராமன்

//ராமநாதபுர மாவட்டத்தில் ஒ௫ சிறிய கிராமம்//லாம் எனக்குத் தெரியாது. சென்னைல... ஸ்டார் பஸார்ல கிடைக்கும் என்று நெட்ல போட்டிருக்காங்க.

‍- இமா க்றிஸ்

நான் இ௫ப்பது சென்னை தான் மா.

ரம்யா ஜெயராமன்