தக்காளி கருணைக்கிழங்கு மசியல்

தேதி: May 28, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சீதாலெஷ்மி அவர்கள் வழக்கியுள்ள தக்காளி கருணைக்கிழங்கு மசியல் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய சீதாலெஷ்மி அவர்களுக்கு நன்றிகள்.

 

தக்காளி - 2
கருணைக்கிழங்கு - 3
பெரிய வெங்காயம் - ஒன்று
மிளகாய்த் தூள் - 1 - 1 1/2 தேக்கரண்டி
மல்லித் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை, கொத்துமல்லி - ஒரு கைப்பிடி அளவு
உப்பு - சுவைக்கேற்ப
நல்லெண்ணெய் / ரீஃபைண்ட் ஆயில் - 3 மேசைக்கரண்டி
தாளிக்க :
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி


 

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையான‌ பொருட்களை தயாராக‌ எடுத்து வைக்கவும்.
கருணைக்கிழங்கை, குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழைவாக வேக வைத்து எடுத்து வைக்கவும்.
வெந்த கிழங்கை தோல் உரித்து மசித்து வைக்கவும்.
தக்காளியை சிறுத் துண்டுகளாக்கி இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதில் பொடியாக‌ நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வதங்கிய வெங்காயத்தில், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
பின்னர் அரைத்த தக்காளி விழுதை ஊற்றி மிதமான தீயில் வைத்து ஒரு நிமிடம் கிளறவும்.
பிறகு மசித்த கருணைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து தீயைக் குறைவாக வைத்து நன்றாகக் கிளறவும். மீதமிருக்கும் 2 மேசைக்கரண்டி எண்ணெயை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறவும்.
சுவையான தக்காளி கருணைக்கிழங்கு மசியல் தயார். ரசம் சாதம், மோர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட, சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கிச்சன் குயினுக்கு வாழ்த்துக்கள். மசியல் சூப்பர்.

Be simple be sample