கேழ்வரகு சாட்

தேதி: May 28, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. டி. விஜயலெட்சுமி அவர்கள் வழங்கியுள்ள கேழ்வரகு சாட் என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய விஜயலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.

 

கேழ்வரகு மாவு - ஒரு கப்
ஜவ்வரிசி - 50 கிராம்
வெங்காயம் - 2
காரட் - 2
பச்சைமிளகாய் - 5
கறிவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 150 கிராம்


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
கேழ்வரகு மாவுடன் உப்பு தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
அதை இட்லி தட்டில் வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
ஜவ்வரிசியை எண்ணெயில் போட்டு பொரித்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு லேசாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் வேக வைத்த உருண்டை மற்றும் பொரித்த ஜவ்வரிசியை சேர்த்து கிளறி துருவிய காரட்டை தூவவும்.
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும். சுவையான கேழ்வரகு சாட் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சத்தான ரெசிப்பி. புதுமையான சாட் இது. நான் இப்போத்தான் இதைப் பற்றிதெரிந்து கொள்கிறேன். பார்க்க கொழுக்கட்டைப் போன்றிருக்கு.
வாழ்த்துக்கள் கிச்சன் குயின் :))

ரொம்ப ஹெல்தியான‌ சூப்பரான‌ சாட். அருமையா இருக்கு. வாழ்த்துக்கள் கிட்சன் குயின்.

எல்லாம் சில‌ காலம்.....

வாழ்த்துக்கு நன்றி வாணி.
இதுவும் ஒருவித‌ கொழுக்கட்டை தான். குட்டியா கொண்டைகடலை சைசுக்கு உருட்டணும்.
கலந்ததும் சாப்பிடணும். அதாவது ஜவ்வரிசி பொரிந்து மொறுமொறுப்பா இருக்கும் போதே சாப்பிடணும்.
எனக்கு ரொம்ப‌ பிடிச்சது.

சிறுதானியத்தில் செய்த‌ குறிப்பு. ஆனால், சுவையோ பெரிது . நன்றி பாலா:))

Unga cooking pathutu ean friend kits sonnen Ava try pannitu nalaruku thanks nu sonna nalaiku nanum try panna poten. Cook panitu ean karurhaum soldren. Byeee