ப்ரெட் புட்டு

தேதி: May 30, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

ப்ரெட் - 3 ஸ்லைஸ்
தேங்காய் - கால் கப்
உப்பு - சிட்டிகை
தண்ணீர் - 2 தேக்கரண்டி


 

ப்ரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி விட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி உதிர்த்துக் கொள்ளவும்.
தேங்காயை துருவிக் கொள்ளவும் அல்லது தேங்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பூவாக உதிர்த்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் உதிர்த்த ப்ரெட்டை போட்டு தண்ணீர், தெளித்து புட்டு மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
புட்டு குழலில் முதலில் தேங்காய் துருவல் பின்னர் ப்ரெட் தூள் என்று முழுவதும் நிரப்பவும்.
5 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான ப்ரெட் புட்டு தயார். சூடாக வாழைப் பழத்துடன் பரிமாறவும். ப்ரெட் மீந்து விட்டால், அல்லது வெறும் ப்ரெட் சாப்பிட்டு போரடித்து விட்டால் இதேப் போல் புட்டு செய்து சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் ஐடியா வாணி.

‍- இமா க்றிஸ்

Hai,Vanny madam,
Aennoda veetla neraya bread slice thoolagi erunthathu, aenna panrathunu theriyama erunthen. Unga kurippa paththathum aennakku usefulla erunthathu. Udane try panni paththutten, nalla vanthathu,Thankyou....(Tamila type panrathuku try panninen, aana mela ulla boxla Tamil typing varala)

"Don't worry be happy"

நன்றி இமா :)

செய்துப் பார்த்து பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி சிவபாரதி. உங்களுக்கு பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி :)

பிரெட் புட்டு ஐடியா சூப்பர் அன்ட் ஈஸி.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *