செல்லப் பிராணிகளுக்கு சில‌ ஓமியோபதி மருந்துகள்

நாலு கால் பிராணிகள் அனைத்திற்கும் பறவைகளுக்கும்
1. எதனால் அடிபட்டாலும் வீக்கம். ரத்தக் காயங்களுக்கு, திறந்த‌ காயங்களுக்கு
ஆர்னிகா. 30 x இரண்டு உருண்டைகள் பாலில் அல்லது தண்ணீரில்
மூன்று நாள்கள் இரண்டு வேளை
2,தீக் காயங்கள், கொதிக்கும் திரவம் மேலே பட்டால் (சில‌ புண்ணியவான்கள்
அடுத்த‌ வீட்டாரின் செல்லங்களுக்குத் தரும் பரிசுகள்
காந்தாரிஸ் 30 x / ஆர்னிகா 30 x / ரெஸ்கியூ ரெமெடி_மலர்மருந்து
இந்த‌ மூன்று மருந்தும் இரண்டிரண்டு உருண்டைகள் பால் அல்லது
தண்ணீரில் கலந்து இரண்டு வேளை மூன்று நாள் தரவும்
3.வயிற்றில் உள்ள‌ புழுக்களுக்கு சல்ஃபர் 30 x இரண்டு உருண்டைகள்
பால் அல்லது தண்ணீர்ல் இரண்டு வேளை மூன்று நாள்கள்
சினா. 30 x இரண்டு உருண்டை மூன்று வேளை ஒரு வாரம் தரலாம்
4.எதையாவது கண்டு வெடி சத்தம் கேட்டு மிரண்டு போனால் கட்டுக்கடங்காது
ரெஸ்க்யூ ரெமெடி மூன்று அல்லது நான்கு உருண்டைகள் தரலாம்
5.கல்,முள், இரும்பு போன்ற‌ பொருள்கள் குத்திக்கொண்டு எடுக்கமுடியாமல்
சீழ் கோத்துக் கொண்டு அழுது கொண்டே இருந்தால்
சைலீசியா 30 x மூன்று உருண்டைகள் இரண்டு வேளை மூன்று
நாள்கள் அதன் பிறகு இரண்டு நாள்கள் ஆர்னிகா தரலாம்.
6.சில‌ நேரங்களில் காலெலும்பு முறிவு ஏற்பட்டால் அதற்கான‌ சிகிச்சை
செய்தபின் A.T. 200 என்கிற பைஒ கெமிகல் மாத்திரை
கிடைக்கும். நான்கு மாத்திரைகள் மூன்றுவேளை பால் அல்லது
தண்ணிரில் கரைத்து குடிக்க‌ வைக்கவும், குறைந்தது 10 நாள்கள்
தரவேண்டியது இருக்கும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஆர்னிகா __ எல்லாவிதமான‌ நீண்ட‌ நாள் முந்தைய‌ அடி பட்ட‌ காயங்களுக்கு
காந்தாரிஸ் __ எல்லா விதமான‌ தீக் காயங்களுக்கும்
ச்ல்ஃபர் ___ வயிற்றில் உள்ள‌ பூச்சிகளுக்கு குறைந்தது 50 வியாதிகளைக்
கண்டிக்கும்.
சினா __ அசைவ‌ ஊண் உணவால் உண்டாகும் வயிற்றுப் புழுக்களுக்கு
சைலீசியா __ நீண்ட நாளாக‌ உள்ள‌ கட்டிகள் பழுக்காமல் வலியோடு
தொல்லை தருதல், உடலில் குத்திக்கொண்டு வெளியே
வராமல் சீழ் கோர்த்த‌ கல்,கண்ணாடி, முள், இரும்பு
போன்றவை அறுவை சிகிச்சை இன்றியே வெளியேற்றிவிடும்
A.T. 200 __ இந்த‌ பையோ கெமிகல் மாத்திரை எலும்பு முறிவு தொடர்பான‌
எல்லா வேதனைகளுக்கும் அருமையான‌ மருந்து,
குறைந்த‌ பட்சம் பதினைந்து அல்லது இருபது நாள்களுக்குள்
சீராக்கி விடும்
ரெஸ்கியூ ரெமெடி __ இது மலர் மருந்து வகையைச் சார்ந்த்து. எதனால்
ஏற்பட்ட‌ மன‌ அதிர்ச்சியையும் போக்கி இயல்பு நிலைக்கு
கொண்டு வரும்.
சில‌ நேரங்களில் 30 x பவர் இல்லை 200 x பவர் தான் இருக்கிறது என்பார்கள்
தவறில்லை. பவர் 200 என்றால் ஒரு உருண்டையே ஒருவேளைக்கு போதும்.
இந்த‌ மருந்துகள் அனைத்தும் தித்திப்பானது என்பதாலும் நாக்கில் பட்ட‌
உடனே கரைந்து விடுவதாலும் (உடனடியாக‌ உமிழ்னீர் மூலம் உடலில் கலந்து
விடுவதாலும் ) நோய் விரைவில் குணமாவதோடு மட்டுமல்ல‌ மருந்து வீணாகாமல் உண்ண‌ வைப்பதும் சுலபம், ஒரு முறை ருசி கண்டால் மருந்தினை துப்ப‌ மாட்டா.
இந்த‌ மருந்துகள் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இந்த‌ மாதிரியான‌
வியாதிகளுக்கு ஒரே மருந்துகள் தான்.
சில‌ நேரங்களில் குட்டிகளுக்கு இரத்தக் கழிச்சல் இருக்கும். அப்போது மஞ்சள்
தூளை நீர் ஊற்றி சின்ன‌ உருண்டையாக்கி குட்டி வாயைத் திறந்து மஞ்சள்
உருண்டையை அடித்தொண்டையில் போட்டு வாயை இறுக மூடிக்கொள்ள‌
வேண்டும். அப்போது தான் உருண்டையை விழுங்கும், இல்லாவிட்டால் துப்பிவிடும். அனேகமாக‌ இரண்டு சுண்டைக்காய் அளவு உருண்டைகள் போதும்.
கொட்டைப் பாக்கை பொடித்து நல்ல‌ கோந்துடன் சேர்த்து மிளகு அளவு உருண்டைகளாக்கி காய‌ வைத்துக் கொள்ளவும், இரவில் மூன்று உருண்டைகளை நாய்களுக்கும் கோழி போன்ற‌ பறவைகளுக்கு கொடுத்து
விட்டால் அடுத்த‌ நாள் காலையில் பூச்சிகள் வெளியாகும். இது வெட்டினரி
டாக்டர் சொன்ன‌ வைத்தியம்( என் பெரிய‌ அண்ணன் சொல்லிக் கொடுத்தது.

என் வீட்டுக் குட்டீஸ்களுக்கு நான் இருபது ஆண்டுகளாக‌ இவைகளைத்
தான் கொடுத்து வருகிறேன்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

மேலும் சில பதிவுகள்