குழந்தைகளுக்கு தடுப்பூசி

ஹலோ தோழிகளே

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டால் ஊசி போட்டதும் தேய்க்கலாமா கூடாதா. நர்ஸ் தேய்க்க வேண்டாம் என்கிறார்கள். பெரியவர்கள் தேய்த்து விடுங்கள் இல்லையெனில் வீக்கம் வரும் என்கிறார்கள். வீங்கி இருந்தால் ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்க சொல்கிறார்கள். குளிர் பிரதேசங்களில் இருக்கும் எங்களை போன்றோர் ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுத்தால் குழந்தைக்கு சளி பிடித்து கொள்ளுமோ என்று பயமாக உள்ளது உதவுங்கள்

என்ன ஊசி என்று தெரியவில்லை. எதுவானாலும் ஊசியைப் போட்டு விட்ட நர்ஸ் சொல்வது தவறாக இருக்க நியாயம் இல்லையல்லவா!

தேய்ப்பது பற்றி - தேய்ப்பவர் கைகள் சுத்தமாக இல்லாவிட்டால் தொற்று ஏற்படச் சாத்தியம் இருக்கிறது.

//குளிர் பிரதேசங்களில் இருக்கும் எங்களை போன்றோர் ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுத்தால் குழந்தைக்கு சளி பிடித்து கொள்ளுமோ// :-) நிச்சயம் இல்லை. (உங்களை ஐஸ் ஒத்தடம் கொடுக்கச் சொல்லவில்லை நான். நீங்கள், 'சளி பிடிக்குமா இல்லையா?' என்று கேட்டீர்கள். அதற்கு மட்டும் பதில் சொல்லியிருக்கிறேன்.)

‍- இமா க்றிஸ்

தடுப்பு ஊசி போட்டால் கண்டிப்பாக தேய்த்து விடக்கூடாது.ஐஸ்ஒத்தடம் கொடுக்கலாம் பயம் வேண்டாம்.நல்ல காட்டன் தூணியின் உள் ஐஸ் கட்டியை வைத்து ஊசி போட்ட இடத்தில் மெதுவாஒற்றி எடுக்கலாம்.

ஏமாறாதே|ஏமாற்றாதே

இப்போது வரும் ஊசிகள் பலவும் வலி இல்லாத‌ ஊசிகளே... அதற்கு தேய்த்து விட‌ வேண்டாம். ஐஸ் கட்டி ஒத்தடம் தேவை இல்லை.. என் குழந்தைக்கு 1+ வயது ஆகிறது... இது வரை இரண்டுமே செய்தது இல்லை... வீங்கவும் இல்லை... டாக்டர் தேய்ப்பதே போதும்... கவலை வேண்டாம்...

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

மேலும் சில பதிவுகள்