எனக்கு இன்னும் ஒரு வாரத்தில் 9வது மாதம் ஆரம்பம். டெலிவரிக்கு பிறகு டாக்டர் எந்த மாதிரி ட்ரீட்மென்ட் கொடுப்பாங்க. நான் எதையெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கணும். ஏன் கேட்கிறேன் என்றால் ப்ரெக்னென்ஸி டைம்ல 4 ஸ்கேன் எடுக்கணுமாம். 4,6,8,9 மாதத்தில். ஆனால், எனக்கு அது தெரியாது. நான் என்னோட ஃப்ர்ஸ்ட் ஸ்கேனே 7ம் மாதத்தில் தான் பார்த்தேன். எனக்கு டாக்டர் ஸ்கேன் பண்ண சொல்லவே இல்லை. அப்புறம் அவங்களே ஏன் இன்னும் ஸ்கேன் பண்ணலைன்னு கேட்டாங்க. எனக்கு ஸ்கேன் பண்ணனும்னு தெரியாது டாக்டர்னு சொன்னேன். இல்லையே நாங்க 5வது மாதத்தில் எடுக்க சொல்லி இருப்போமேனு சொன்னாங்க. இல்லை நீங்க என் கிட்ட சொல்லவே இல்லைனு சொன்னேன். சரி இப்போ போய் ஸ்கேன் பண்ணிட்டு வாங்கன்னு சொன்னாங்க. ஸ்கேன் பண்ண டாக்டர் "நீங்க ஏன் இவ்வளவு லேட்டா ஸ்கேன் பண்றீங்க. 5,6 மாதத்தில் பார்த்தால் தான் ஸ்கேன் க்ளியரா தெரியும். இப்போ பேபி நல்லா வளர்ந்துட்டதால ஸ்கேன் க்ளியரா தெரியாது"ன்னு சொன்னாங்க.
அதே போல என் ஃப்ரெண்ட்ஸ்லாம் டாக்டர் ப்ரோ ப்ளஸ் பவுடர் குடுத்தாங்க. உனக்கு தரவில்லையான்னு கேட்டாங்க. அது குழந்தையின் வளைச்சிக்கு உதவுமாம். எனக்கு என் டாக்டர் மாத்திரை தவிர வேற எதுவும் கொடுக்கலைன்னு சொன்னேன்.
சோ இப்ப என்னோட டவுட் என்னன்னா டெலிவரிக்கு பிறகு டாக்டர் எந்த மாதிரி ட்ரீட்மென்ட் கொடுப்பாங்க. நான் எதையெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கணும். பாப்பாவுக்கு எந்த மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுக்கணும். ஏன்னா அவங்க ஏதாவது மிஸ் பண்ணால் கூட கேட்கிறதுக்கு தான்.
சரண்யா
http://www.arusuvai.com/tamil/node/28452
இந்த லிங்க்-ல் தேடி படித்துப் பாருங்கள். விவரங்கள் கிடைக்கும்.
vaany sister ippo enakku 34th
vaany sister ippo enakku 34th week. 2 days'a enakku kaalaiala vomitting adhigama irukku. ippo vomit panna baby nenju mela eridumnu solranga. payama irukku. vomit stop panna edhavadhu sollunga. adhe pola pakal'la normala dhaan irukken. night'la udambu romba heat agiduthu. kai kaalellam payangarama eriyudhu. soodu thaanga mudialai. cold'um night'la dhaan adhigama irukku enna pannalam. thummal night'a dhaan adhigama varuthu.
சரண்யா
//ippo vomit panna baby nenju mela eridumnu solranga.// யார் சொல்றாங்க? என்ன சரண்யா இது! சொல்றவங்க சொன்னா, நீங்க யோசிச்சே பார்க்க மாட்டீங்களா?
குழந்தை இருக்கிறது கருப்பையின் உள்ளே. கருப்பை... பிறப்பு உறுப்பிலிருந்து ஆரம்பித்து கருப்பை முழுவதும் கிட்டத்தட்ட ஒரே உறுப்பு போலதான் இருக்கும். அது கழன்று குழந்தையோட மேலே எங்கே போவது! எப்படி நெஞ்சில் ஏறுவது! நெஞ்சுக் கூட்டினுள் ஏற்கனவே இதயம், நுரையீரல் அது இதுன்னு சமோசாவுக்கு நிரப்பின மாதிரி உறுப்புகள் இருக்கு. குழந்தை அங்கல்லாம் போய்த் தங்க இடமே இல்லைங்க. குழந்தை பிறந்த பின்னால்தான் உங்க நெஞ்சு மேல ஏறும்.
வாந்தி - அது வாய் வழியே போகும் உணவு எப்படி இரைப்பைக்குப் போகிறதோ அதே வழியாகத் திரும்ப வெளியே வரப் போகிறது. இரண்டும் வெவ்வேறு பாதைகள். இவையெல்லாம் அடிப்படை விஷயங்கள். உங்களுக்குத் தெரியாமலிருக்க நியாயமில்லை.
நீங்க உங்க குடும்ப டாக்ரை ஒரு தடவை பார்க்கணும் சரண்யா. போக முன்னால உங்க சந்தேகங்கள், இப்படி யாராவது சொன்ன 'அறிவுரைகள்' எல்லாவற்றையும் ஒரு லிஸ்ட் போட்டு எடுத்துப் போங்க, கேட்கிறப்ப மறக்காமலிருக்கும். டாக்டரிடம் நீங்க படிக்க, கர்ப்பம், பிரசவம் தொடர்பான நல்ல புத்தகங்கள் ரெகமண்ட் பண்ணக் கேளுங்க. வாங்கி படிச்சுப் பார்க்கணும் கட்டாயம்.
- இமா க்றிஸ்
imma amma
இமா அம்மா நீங்க சொல்றபடி டாக்டர்கிட்ட போகும் போது எழுதி வச்சிக்கிறேன். ஆனால் இப்போ வாந்தியை கட்டுப்படுத்த எதாவது வழி சொல்லுங்கள். எலுமிச்சை, மாதுளை, இஞ்சி கஷாயம் எல்லாம் ட்ரை பண்ணி பார்த்துட்டேன். வேற ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். டாக்டர் மாத்திரை கொடுத்தாங்க. அப்பவும் சரியாகலை. வாந்தி எடுக்கும் போது அடி வயிறு ரொம்ப வலிக்குது. பிறகு ரொம்ப சோர்ந்து போயிடறேன்.
saranya
Naan delivery varai vomit pannaen. Nenjulaiyum erala thalailayum erala. Kaalaila verum vayirril konjam neer kudinga. Vomit varum. Adhan pin unavu eduthukanga. Unavu thangum.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சரண்யா
//எலுமிச்சை, மாதுளை, இஞ்சி கஷாயம் எல்லாம் ட்ரை பண்ணி பார்த்துட்டேன்.// எந்த நேரம் எடுப்பீங்க? அதிகாலை எலுமிச்சைச் சாறு குடிப்பது தெரியும். மீதி இரண்டும் அனுபவம் இல்லை. //மாத்திரை கொடுத்தாங்க. அப்பவும் சரியாகலை.// வாந்தி வராது என்று நினைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பியுங்க. அதைப் பற்றி நினைக்காமலிருக்க முடிந்தால் இன்னும் நல்லது. சொல்வது சுலபம்; கடைப்பிடிப்பது சுலபமில்லை. :-) ஒரே சமயம் அதிகாமச் சாப்பிடாமல் சின்னச் சின்ன உணவாகப் பிரித்துச் சாப்பிட்டுப் பாருங்கள்.
- இமா க்றிஸ்
உடல் எரிச்சல்
வாணி சிஸ்டர் நீங்க சொல்றபடி தான் நானும் செய்கிறேன். வாந்தி எடுக்கும் போது அடிவயிறு ரொம்ப வலிக்குது அதனால தான் கேட்டேன். ஆனால் ராத்திரியில் உடம்பு ரொம்ப சூடாகிடுது அதற்கு என்ன பண்ணலாம். ரொம்பவே கை, கால் எல்லாம் காய்ச்சல் வந்த மாதிரி ரொம்ப சுடுது.