தேதி: June 2, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வடித்த சாதம் - 2 கப்
எலுமிச்சை - 3
கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கடலை பருப்பு - 3 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி - சிறிது
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கேரட் - ஒன்று
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் கடலை பருப்பு சேர்த்து தீய விடாமல் வறுக்கவும்.

அதனுடன் காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

எலுமிச்சையை பிழிந்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து தாளித்தவற்றுடன் சேர்க்கவும். பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் சிறு தீயில் வைத்து கொதிக்க விடவும்.

அதனுடன் கேரட்டை துருவி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். கேரட்டை வேக வைக்க வேண்டாம்.

இந்த கலவையில் உதிர் உதிராக வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்.

சுவையான கோவிலில் கொடுக்க கூடிய எலுமிச்சை சாதம் தயார்.

விரும்பினால் கடலை பருப்புடன் வறுத்த வேர்கடலையும் சேர்க்கலாம்.
Comments
பாலா
இது தான் கோவில்ல கொடுப்பாங்களா? நான் இதுவரை புளி சாதம் தான் சாப்பிட்டிருக்கேன். எங்க வீட்டில் எப்பவுமே எலுமிச்சை சாதம் இந்த முறை தான். கேரட் போட்டு சில நேரம், போடாம பல நேரம். வர வர கலர்ஃபுலா குறிப்பை போட்டு அறுசுவையில் அசத்துறீங்க :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி டீம்
அப்பா என்னா ஸ்பீடு? ஜெட் வேகத்துல வேல செய்றீங்கயா. சான்சே இல்ல. நன்றி டீம்.
எல்லாம் சில காலம்.....
வனி அக்கா
எல்லாம் உங்க ஆசிர்வாதம். எங்க ஊர் கோவில்ல அடிக்கடி இதே மாறி எலுமிச்சை சாதம் தான் குடுப்பாங்க. சில நேரம் புளி சாதம். இது தான் செய்முறை ஈஸினு எங்க ஊர் ஐயர் இதையே அடிக்கடி செஞ்சி குடுப்பார். ஹா ஹா:)
எல்லாம் சில காலம்.....