குழந்தைக்கு தடுப்பூசி கட்டி உதவவும்

என் குழந்தைக்கு 2 வயது ஆகிறது. அவனுக்கு தடுப்பூசி போட்ட இடத்தில் ஐஸ் வைத்து தடவிய பிறகும் கட்டியாக மாறி விட்டது. டாக்டர் ஒரு கிரீம் எழுதி தந்தார். அதை போட்டும் சரி ஆக வில்லை. அதில் பரு மாதிரி இருக்கிறது. என்ன செய்யவென்று தெரியல தயவு செய்து தெரிந்தவர்கள் உதவவும்

அன்புள்ள‌ கவி,
கட்டி கருப்பாக‌ இருக்கிறதா, ரணமாக‌ இல்லாமல் ஆறி இருந்தால் நல்லது, குழம்புக்குப் போடும் புளியை கெட்டியாகக் கரைத்து
அதனோடு கொஞ்சம் மஞ்சள் தூளையும் கலந்துகெட்டியாகக் கொதிக்க‌ வைத்து ஆறவைத்துக் கொள்ளுங்கள்
அதை ஊசி குத்திக் காய்த்துப் போன‌ இடத்தில் தடவி விடுங்கள்.
காயக் காய‌ இரண்டு மூன்று தடவை மேலே மேலே தடவி தடவிக் காயவிடுங்கள். குறைந்தது மூன்று நாளாவது ஆகும், எரிச்சல் எதுவும் இருக்காது. க்ரீம் போலவே தான் இருக்கும். அங்கே உறைந்து கட்டியாகி உள்ள‌ ரத்தம் தானாகவே கரைந்து விடும். கட்டி உடைந்து ரத்தம் வெளியே எல்லாம் வராது.
உள்ளுக்குள்ளேயே கரைந்து ரத்தத்தோடு சேர்ந்து விடும். கூடுமானவரை
கருப்பு நிறம் மாறிவிடும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நன்றி தோழி அதில் கருப்பாக எல்லாம் இல்லை. வெளியே தெரியவும் இல்லை. ஊசி குத்திய இடத்தில் கை வைத்து பார்த்தால் கட்டியாக உள்ளது. நீங்கள் கூறியதை முயற்சி செய்து பார்க்கிறேன். நீங்கள் இதனை யாருக்காவது முயற்சி செய்தது உண்டா? என்னுடைய கேள்வி தவறு எனில் மன்னிக்கவும்.

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

குழந்தைகளுக்கான மருத்துவத்தை நடைமுறையில் கடைப்பிடித்து அது
சரியான‌ முறை என்று தெளிந்த‌ பின்பே அதைப் பிறருக்குக் கூறுவோம்'
என் வ்யது 60 பதுக்கு மேல். தமிழ் படித்தவர்களுக்கு நாட்டு மருத்துவம் தெரியும்.
அதிலும் மருத்துவத்தில் அவர்களுக்கு விருப்பம் இருந்தால் கற்கும் வாய்ப்பை
எக்காரணம் கொண்டும் விடமாட்டார்கள்.(சங்கப் பாடல்களிலும் பதிணெண் சித்தர் பாடல்களும், திருமூலர் பாடல்களும் முழுக்க முழுக்க‌ மருத்துவமே. அனைத்தும் தமிழ்ப்பாடல்களே.)
உங்கள் வீட்டுப் பெரியவர்களைக் கேட்டுத் தெளிந்த‌ பின் பயன்படுத்தவும்.
அன்புடன்பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

வெரி வெரி சாரி. உங்கள் வயது எனக்கு தெரியாது அதனால் தான் அப்படி கேட்டு விட்டேன். கண்டிப்பாக கடைப்பிடிக்கிறேன். நன்றி மேடம்.

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

6மாதம் உள்ள எனது மகளுக்கு முளையில் பால் கட்டுவதை போல் கட்டி உள்ளது ஆனால் அதில் வலி ஏதும் இல்லை அதற்கு காரணம் புரியவில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை

காரணம் ஹோர்மோன்கள். அது தானாக‌ சரியாகும். யோசிக்க‌ வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

என் குழந்தைக்கு 3 மாதம் ஆகிறது.தொடையில் ஊசி போட்ட இடத்தில் கட்டியாக இருக்கிறது அதை எப்படி கரைய வைக்கிறது கொஞ்சம் சொல்லூங்க

என் குழந்தைக்கு 3 மாதம் ஆகிறது.தொடையில் ஊசி போட்ட இடத்தில் கட்டியாக இருக்கிறது அதை எப்படி கரைய வைக்கிறது கொஞ்சம் சொல்லூங்க

15 மாத குழந்தைக்கு பல் வரவில்லை

Malar

ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி. சில குழந்தைங்களுக்கு பிறக்கும் போதே பல் முளைக்கும், சில குழந்தைகளுக்கு தாமதமாகலாம். பயம் வேண்டாம். குழப்பமாக இருந்தால் ஒரு நல்ல மருத்துவரை சந்தியுங்கள்.

- பிரேமா

மேலும் சில பதிவுகள்