தேதி: June 5, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ராதா அவர்கள் வழங்கியுள்ள ஹனி-பாதாம் மிக்ஸ் குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ராதா அவர்களுக்கு நன்றிகள்.
பால் - 2 கப்
பாதாம் - 10
பிஸ்தா - 5 (விரும்பினால்)
முந்திரி - 6
தேன் - 3 மேசைக்கரண்டி
வேர்க்கடலை - ஒரு மேசைக்கரண்டி
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
பாலை பத்து நிமிடங்களுக்கு நன்றாகக் காய்ச்சவும்.

பாதாமை கால் கப் கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் போட்டு எடுத்து தோல் நீக்கவும். அதில் பாதி பாதாமை பொடியாக நறுக்கி வைக்கவும்.

மீதி பாதாம், பிஸ்தா, முந்திரி, சர்க்கரை, வறுத்த வேர்க்கடலை, தேன் ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவும்.

அரைத்த விழுதை எடுத்து பாலில் சேர்த்து கலக்கவும்.

இந்தக் கலவையில் குங்குமப்பூ சேர்க்கவும்.

இதில் நறுக்கிய பாதாமை மேலே தூவி, சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறலாம்.

Comments
நன்றி டீம்
குறிப்பை அழகாக வெளியிட்டு மீண்டும் கிட்சன் குயின் பட்டம் கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள்.
எல்லாம் சில காலம்.....