முடக்கத்தான் கம்பு தோசை

தேதி: June 5, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. செல்வி அவர்களின் முடக்கத்தான் கம்பு தோசை என்ற குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய செல்வி அவர்களுக்கு நன்றிகள்.

 

கம்பு - அரை கிலோ
வெந்தயம் - 50 கிராம்
கொத்தமல்லித் தழை - 2 கொத்து
கறிவேப்பிலை - 2 கொத்து
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 5
முடக்கத்தான் கீரை - 2 கைப்பிடி
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

கம்பு, வெந்தயம் இவற்றை நன்றாக கழுவி 2 மணிநேரம் ஊற வைக்கவும்.
மிக்ஸியில் கம்பு, வெந்தயம், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை இவற்றை ஒன்றாய் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
முடக்கத்தான் கீரையை ஆய்ந்து தண்ணீர் சேர்த்து லேசாக‌ அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த‌ கீரையை கம்பு மாவுடன் சேர்த்து கலக்கவும்.
கம்பு கீரை மாவுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறியதாக நறுக்கி சேர்க்கவும்.
இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து தோசையாக வார்க்கவும். சுற்றி எண்ணெய் ஊற்றவும்.
தோசையை திருப்பி போட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
சத்தான முடக்கத்தான் கீரை கம்பு தோசை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை அழகாக‌ வெளியிட்டு மீண்டும் கிட்சன் குயின் பட்டம் கொடுத்தமைக்கு மிக்க‌ நன்றிகள்.

எல்லாம் சில‌ காலம்.....