7 ஸ்டார் கேக்

தேதி: June 5, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. அமினா பீவி அவர்களின் 7 ஸ்டார் கேக் என்ற குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய அமினா பீவி அவர்களுக்கு நன்றிகள்.

 

பால் - அரை லிட்டர்
சர்க்கரை - 1 1/2 கப்
கடலை மாவு - ஒரு கப்
துருவிய தேங்காய் - ஒரு கப்
ரவை - ஒரு கப்
மைதா மாவு - அரை கப்
காரட் - 2
ஏலம் - 3
நெய் - 300 கிராம்
முந்திரிபருப்பு - சிறிது


 

முதலில் காரட்டை துண்டுகளாக நறுக்கி பாலில் வேக வைக்கவும்.
வேக வைத்த‌ கேரட்டை மிக்ஸியில் போட்டு மசித்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவலை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாலை சுண்டக் காய்ச்சி கோவா தயாரிக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு சர்க்கரையை போட்டு பாகு காய்ச்சவும்.
கம்பி பதம் வரும் போது மைதா அல்லது கோதுமை மாவு, ரவை, கடலை மாவு ஆகியவற்றை போட்டு கிளறவும்.
பின்னர் அதில் அரைத்த‌ கேரட் விழுது மற்றும் வறுத்த தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
பிறகு நெய், கோவா சேர்த்து கிளறி விட்டு ஏலப்பொடி தூவி கிளறவும்.
கெட்டியான பதத்தில் வந்ததும் நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி அதில் முந்திரி பருப்பு போட்டு அலங்கரிக்கவும்.
ஆறியதும் கேக்கை துண்டுகள் போட்டு பரிமாறவும். சுவையான‌ 7 ஸ்டார் கேக் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை அழகாக‌ வெளியிட்டு மீண்டும் கிட்சன் குயின் பட்டம் கொடுத்தமைக்கு மிக்க‌ நன்றிகள்.

எல்லாம் சில‌ காலம்.....