தயிர் வடை

தேதி: June 8, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

 

முழு உளுந்து - ஒரு கப்
தயிர் - ஒரு கப்
இஞ்சி - அரை அங்குலத் துண்டு
பச்சை மிளகாய் - 3
தேங்காய் துருவல் - கால் கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு கப்


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். உளுந்தை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
உளுந்துடன் அரை தேக்கரண்டி உப்பு, 2 பச்சை மிளகாய், கால் அங்குலத் துண்டு இஞ்சி சேர்த்து க்ரைண்டரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய் துருவல், ஒரு பச்சை மிளகாய், கால் அங்குலத் துண்டு இஞ்சி, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து அரைத்து எடுத்து தயிருடன் சேர்க்கவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகைப் போட்டு பொரித்து தயிருடன் சேர்க்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்ததும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் ஒரு கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் உளுந்து மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரிக்கவும்.
வடை வெந்ததும் திருப்பி விட்டு மற்றொரு புறத்தையும் வேகவிட்டு, எண்ணெயை வடித்து எடுக்கவும்.
வடைகளைத் தயார் செய்து வைத்திருக்கும் தயிரில் போட்டு அரை மணிநேரம் ஊறவிடவும்.
ஊறியதும் ஒரு தட்டில் எடுத்து வைத்து மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பிராமண சமையலில் 40 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள திருமதி. ரங்கநாயகி ராஜகோபாலன் வழங்கிய குறிப்பு இது. இவர் மாதர் சங்கத் தலைவி, சமூக சேவகி, நல்ல குடும்பத்தலைவி என்று பல முகங்களை உடையவர்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பு பிடித்திருக்கிறது. புக்மார்க் செய்து வைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்