தேதி: June 11, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மாங்காய் - பாதி
அரிசி - 100 கிராம்
கடலைப்பருப்பு - கால் கப்
பச்சை மிளகாய் - 4
கடுகு - முக்கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
இஞ்சி - அரை அங்குலத் துண்டு
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மாங்காயைத் துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி துருவி வைக்கவும். கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அரிசியை வேக வைத்து சாதமாக வடித்து எடுத்து, அதில் எண்ணெய் ஊற்றி வைக்கவும். சாதத்துடன் உப்பு சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். உளுத்தம் பருப்பு சற்று பொன்னிறமானதும், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியைச் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் துருவிய மாங்காயைப் போட்டுக் கிளறவும். மாங்காய் வேகும் வரை வைத்திருக்கவும்.

மாங்காயில் உள்ள தண்ணீர் வற்றியவுடன், வேக வைத்த கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து கிளறிவிடவும்.

பிறகு சாதத்தைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.

சுவையான மாங்காய் சாதம் தயார். இந்த மாங்காய் சாதத்தில் கடலைப்பருப்பிற்கு பதிலாக வேக வைத்த நிலக்கடலையைச் சேர்க்கலாம்.

இந்த குறிப்பை அறுசுவை நேயர்களுக்காக செய்துக் காட்டியவர், திருமதி. கலா ரவிச்சந்திரன் அவர்கள். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். அனைத்து வகையான சைவ உணவுகளையும் சுவைப்பட தயாரிக்கக் கூடியவர். திருமணத்திற்கு பின் தன்னுடைய நாத்தனாரிடம் தான் சமையல் கற்றுக் கொண்டார்.
