நேந்திர வாழைப்பழ ஜாமுன்

தேதி: June 13, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

நேந்திரம் பழம் - 3
சர்க்கரை - 250 கிராம்
ஏலக்காய் - 2
குங்குமப்பூ (அ) ஃபுட் கலர் - சிறிது
நெய் (அ) எண்ணெய் - பொரிக்க


 

தோல் கறுத்த நன்கு கனிந்த வாழைப்பழமாக எடுத்துக் கொள்ளவும்.
அதை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜீரா தயார் செய்யவும். அதில் புட் கலர் மற்றும் ஏலக்காயை பொடி செய்து சேர்க்கவும்.
கடாயில் பொரிக்க தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய விடவும்.
நறுக்கிய வாழைப்பழத்துண்டுகளை போட்டு குறைந்த தீயில் வைத்து பொரிக்கவும்.
அவை நன்கு சிவந்து பொன்னிறமாக மாறியதும் எடுக்கவும்.
அதை ஜீராவில் போட்டு அரை மணி நேரம் ஊறியதும் எடுக்கவும்.
சுவையான நேந்திர வாழைப்பழ ஜாமுன் ரெடி.

வாழைப்பழம் அதிகம் இனிப்பாக இருந்தால் சர்க்கரையின் அளவை குறைத்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

semma idea !!!!! and sweet is also looking nice !!!!!!!

Have to try it :):)

Be Cool All is Well

With Cheers!!!!
BrindhaRanjit Kumar

செம‌ பார்க்கவெ நல்லாரிக்கு,

அருமையா இருக்கு ரேவ்ஸ்.... புதுசாவும் இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின்& டீம் மிக்க நன்றி

Be simple be sample

தான்குயூ பிருந்தா, கிருத்திகா, வனி .

Be simple be sample