உடல் எடை அதிகரிக்க‌

தோழிகளே,

எனக்கு உடல் எடை அதிகரிக்க‌ உணவு சொல்லுங்க‌ள். எனது எடை 38கிலோ,உயரம் 52cm. அனைவரும் 45 கிலோவாது இருக்க‌ வேண்டும் என்று கூறுகிறனர்,எனக்கு செரிமான‌ பிரட்சனை உள்ளது.டாக்டரிடம் சென்றும் உபயோகம் இல்லை.எனக்கு உணவு மூலம் தீர்வு தாருங்கள்

hi frd,

daily patham,pistha,munthiri,athi ithai ellathaum night ooravetchu morning sapidunga pa,ell urundai daily sapidunga, nalla thungunga,snaks neraya sapidunga,

non-veg na daily 1 egg, aatukal juce sapidunga, weekly 3 times non veg serthukkinga k va, 1 month la positive result kidaikum

( patham thol eduthuttu sapidunga ,athu poison ma)

//உயரம் 52cm// 152 தானே!

//செரிமான‌ பிரட்சனை உள்ளது.// என்ன விதமான உணவுகள் ஒத்துவரவில்லை!
எண்ணெய், கொழுப்பு, காரம், அமிலத்தன்மை உள்ள உணவுகளைக் குறைத்துப் பாருங்கள்.

உடல் எடையைக் கூட்டச் சுலபமான வழி... சாதத்தின் அளவை அதிகரிப்பது. நீங்கள் உண்ணும் எல்லா உணவுகளையும் அளவில் சிறிது கூட்டிச் சாப்பிடுங்கள். கூடவே உடற்பயிற்சியும் இருக்கட்டும். தொடர்ந்து எடையைக் கவனித்து வாருங்கள். தேவைக்கு மேல் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

நன்றி Kiruthika & imma.

enaku oil food othukathu imma. kaaram greenchili serathu. food konjam athigamaalum vomiting problem varum. 3 idly ku mela sapida mudiathu. serimana problem solve pana ena sapidalam. 1st atha sari seithal than food athigama eduthuka mudium

நன்றி எல்லாம் வேண்டாம் திவ்யா,

உடனே அதிகமா சாபிட வேண்டாம்,கொண்ஜம் கொன்ஜமா அதிகப்படுதுங‌

//food konjam athigamaalum vomiting problem varum// :-) 'வரும்' என்று நினைத்தால் வரும்; 'வராது' என்று நினைத்தால்!! நினைத்துப் பாருங்க. அல்லது 'வரும்' என்று நினைக்காமலிருக்கப் பாருங்க. எம் மனது நிறையக் காரியம் பண்ணக் கூடியது.

//3 idly ku mela sapida mudiathu.// :-) இது சைக்காலஜி பிரச்சினை. இப்படி எண்ணிக்கையைப் பார்க்காதீங்க. இட்லி 3 + தொட்டுக்கறதைக் கூட்டலாமில்ல! அல்லது தொட்டுக்கறதைக் குறைத்து மூன்றரை இட்லி சாப்பிட இரைப்பையில் இடம் போதும். மெதுவே வேளைக்கு கால் பங்கு இட்லியாகக் கூட்டலாம். ஒன்றும் ஆகாது. சின்ன இட்லியாக வார்த்து 4 சாப்பிடுங்க.

//serimana problem solve pana ena sapidalam.// கொழுப்பு காரத்தைக் குறைத்தாலே சரியாகும்.

//1st atha sari seithal than food athigama eduthuka mudium// இது ஒன்றில் ஒன்று தங்கிய விடயம். எது 1st என்பது கிடையாது. உங்கள் மனது அப்படிச் சொல்கிறது. அதன் சொல்லைக் கேட்காமல் உங்கள் சொல்லை மனம் கேட்க வையுங்கள். ஒரு தடவை சாப்பிட்டுத்தான் பாருங்களேன்.

'இப்படித் தான்,' என்கிற எண்ணத்திலிருந்து நீங்கள் வெளியே வர வேண்டும். மாற்றத்தை உங்கள் மனது ஏற்றுக் கொள்ளும் நிலை வந்தால் வயிறும் ஏற்றுக் கொள்ளும். உங்கள் கையில்தான் எல்லாம் இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

நீங்கள் சொன்ன‌ மாறியே செய்கிறேன். இன்றே ஆரம்பிக்கிறேன்

weight increase panna night milk la honey mix pani kudinga.apram konjam karuppu sundal night waterla oora vachurunga.morning empty stomach la sundal saptutu milk kudinga.

black grapes sapdunga.grapes sapta seekram serimaaanam aagi nallaa pasi edukum.nallaa pasi edukum pothu sapadu sapdunga or fruits sapdunga or edhavathu vega vacha payaru sapdunga.apram vegetables,keerai vagaigal serthukonga.nallaa thoonganum.nallaa vela seiyanum.

HELLO SIS....AM ALSO HAVING THE SAME PROBLEM....PLEASE TRY FOR VENPUSANI LEGIYAM.....ITS ONLY FOR DIGESTION.....AND WEIGHT GAIN...KNOW THS AVAILBILITY IN NEAREST ARAVINDH AASHRAM...

நீங்கள் கொடுத்திருக்கும் அறிகுறிகள் அனேகமாக அல்சருக்கான அறிகுறிகளாகத் தெரிகிறது. முதலில் உணவு . செரிமானம் ஒழுங்காகி
விட்டால் பிறகு உடல் எடை பற்றி யோசிக்கலாம். அவசரப்படவேண்டாம்.
ஓமத்தை குடிக்கும் வென்னீரில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு அந்த‌
தண்ணீரையே குடி நீராகப் பயன்படுத்துங்கள். 99% வெளியே தண்ணீர் வேறு
பானங்கள் குடிப்பதை முற்றிலுமாக கொஞ்ச‌ நாளைக்கு நிறுத்தி விடுங்கள்.
உங்கள் செரிமானப் பிரச்சினை இதிலேயே பாதி தீர்ந்து விடும்.வயிற்றில் எரிச்சல்
வாயுத்தொல்லை, உணவு சீரணமாகாமல் தொல்லை தருதல் இவை நீங்கும்.
கல் போட்டு பழுக்க‌ வைத்த‌ பழங்களை ( இவற்றில் பழத்தின் இயல்பு
வாசனை இருக்காது.) எக்காரணம் கொண்டும் சாப்பிடாதீர்கள்.
அசைவ‌ உணவுகளைத் தற்போது தவிர்த்து விடுதல் நல்லது. மிளகாய் விதைகள் நன்கு அரைபடாமல் ஒன்றும் பாதியுமாக‌ இருப்பதை சாப்பிடாதீர்கள்.
முன் பதிவுகளில் மூலத்திற்கும், வயிற்றில் பூச்சி இருப்பதற்கும்
உணவு முறைகள் தந்து இருக்கிறேன், அவற்றை நன்கு படித்துப் பாருங்கள்
வயிறு எப்போதுமே காலியாக‌ இருக்கக் கூடாது. பொட்டுக் கடலையை
தூளாக்கி அதோடு வெல்லம் சேர்த்து வேர்க்கடலை உருண்டை போல் செய்து
அதைப் பணி நேரத்தில் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை ஒரூருண்டை வீதம்
சாப்பிடுங்கள், பசி குறையும், வயிறு எரிச்சல் குறையும். இது அல்சருக்கு
நல்ல‌ மருந்து பொட்டுக்கடலை, வெல்லம் செரிமானத்திற்கு மிக் நல்லது.
புளிப்பான‌ எதையும் சாப்பிடக் கூடாது, வெந்தைய‌ இட்லி சாப்பிடவும்.எந்த‌
உணவையும் கொதிக்க‌ கொதிக்க‌ சாப்பிடாதீர்கள். நன்கு குழைய‌ வெந்த‌ சுமாரான‌ சூட்டோடு எதையும் சாப்பிடவும்.கரிசல்லாங்கண்ணிக்கீரை,பொன்னாங்கண்ணீக் கீரைபோன்றவற்றை
கடைந்து சாப்பிடவும். ஒருவாரம் இதைக்கடைப்பிடித்து பிறகு எழுதுங்கள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்