கிட்ஸ் க்ராஃப்ட் - மிக்கி மவுஸ்

தேதி: June 15, 2015

5
Average: 4.7 (6 votes)

 

கலர் தெர்மாக்கோல் பால்ஸ் - 2 பாக்கெட்
மிக்கிமவுஸ் படம்
பைண்டிங் கம்
பேப்பரிக் பெயிண்ட் - கருப்பு மற்றும் க்ரீம் கலர்
சார்ட் பேப்பர்
கத்தரிக்கோல்
ப்ரஷ்
கார்ட்போர்டு அட்டை

 

ஒரு சார்ட் பேப்பரில் படத்தில் உள்ளது போல் மிக்கி மவுஸின் உருவத்தை வரைந்து கத்தரிக்கோலால் அதன் வடிவத்தை நறுக்கிக் எடுத்துக் கொள்ளவும்.
இந்த வடிவத்தை கார்ட்போர்டு அட்டையில் வரைந்து அதனை தனியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்னர் இந்த அட்டையின் மேல் பைண்டிங் கம் தடவி சார்ட் பேப்பரில் வரைந்து வைத்திருக்கும் மிக்கி மவுஸ் படத்தை ஒட்டவும்.
மிக்கி மவுஸின் வாய்ப்பகுதிக்கு சிவப்புநிற தெர்மாக்கோல் பாலை ஒட்டவும்.
கருப்புநிற தெர்மாக்கோல் பால்ஸ் கிடைப்பது கடினம். தேவையான அளவு தெர்மாக்கோல் பால்ஸில் கருப்புநிற பேப்பரிக் பெயிண்டை சிறிது அளவு ஊற்றி ப்ரஷ்ஷால் நன்றாக கலந்துக் கொள்ளவும். ப்ரஷால் முடியவில்லையெனில் கையில் க்ளவுஸ் அணிந்து கையாலேயே பிசைந்து விடவும். தண்ணீர் கலக்க வேண்டாம். சீக்கிரம் காய்ந்து விடும்.
மிக்கி மவுஸின் தலைப்பகுதியில் கம் தடவி இந்த கருப்புநிற தெர்மாக்கோல் பாலை இடைவெளி இல்லாமல் ஒட்டவும். ஓவல் வடிவில் வரைந்த கண்ணின் அடியில் ஒரே ஒரு கருப்புநிற தெர்மாக்கோல் பாலை மட்டும் ஒட்டவும். மூக்குப்பகுதியிலும் ஒட்டவும்.
உதடு வரைந்த இடத்தில் மஞ்சள்நிற தெர்மாக்கோல் பாலை வரிசையாக ஒட்டிக் கொள்ளவும். முகம் முழுவதும் ரோஸ்நிற தெர்மாக்கோல் பாலை ஒட்டவும். தலையின் மற்ற இடங்களில் கருப்புநிற தெர்மாக்கோல் பாலை ஒட்டவும்.
இப்போது இடைவெளி தெரியும் இடத்தில் ஆரஞ்சுநிற தெர்மாலோல் பாலை ஒட்டவும். மிக்கியின் காதுகளுக்கு நடுவில் க்ரீம் க்லர் பேப்பரிக் பெயிண்ட் செய்து நடுவில் துளையிட்டுக் கொள்ளவும்.
ரிப்பன் லேஸை தேவையான அளவு எடுத்து இரண்டாக மடித்து முன்பக்க ஒட்டையின் வழியாக விட்டு பின்பக்கம் முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். மிக்கி மவுஸ் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகா இருக்கிறார். சின்னவர்கள் செய்யச் சுலபமான கைவேலை. சட்டென்று பார்க்க ஸ்மாட்டீஸ் ஒட்டிச் செய்த கேக் போல இருக்கிறது. :-)

‍- இமா க்றிஸ்