ear pain in 4th month

Hi sister paiyanku 4th month start aguthunga last four fayda sometimes crying but yesterday only we found ear pain nu.doctora ponom 6 days ku drops koduthu irukkanga.earla hole kida vingunamathiri irukku.yarukkavathu ippadi irunthu irukka.nalla playing antha side padukkara namma kai patta mattum crying

நீங்கள் வசிக்கும் ஊரில் கட்டிப் பெருங்காயம் கிடைத்தால் அதை மருந்து
உரைக்கும் கல்லில் மஞ்சள் இழைப்பது போல் இழைத்து அந்த‌ விழுதை காதைச்
சுற்றிலும் காது உள்ளே படாமல் கன்னப்பகுதியில் பற்று போடுவது போல் சுற்றிலும் தடவி விடவும். வென்னீர் விட்டு இழைக்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

இது போல‌ சிறு பிள்ளைக்கு படுத்திருக்கும் போது பால் கொடுத்தா காது வலி வரும் என்று கேட்டிருக்குறேன், உண்மையா என்பது தெரியாது. குளிக்க‌ வைக்கும்போது கவனமா இருங்க‌, காதுல‌ நீர் போகாம‌. துவட்டும் போது துணி கொண்டு காதை சுத்தம் பண்ணுங்க‌. கவலைப்படாதீங்க‌, சரியாகிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Romba thanks nga

Poongothai amma neenga sonna padi seyithen ippo parava illai.romba romba thanks.

Monthly 10days avathu loose motion pora romba athigama pona mattum doctor oru power kodukka sonnaru.ungalukku yetha vathu kai maruthuvam therinthal sollunga.

பாப்பாவிற்கு வயிறு இரைந்து (வயிறு புஸ் என்று சற்று உப்பி இருக்கும்)
பேதி ஆனால் ஓமத்தைச் சட்டியில் 2 தேக்கரண்டி போட்டு கருக‌ வறுத்து பொடி
செய்து கொள்ளவும். அந்த‌ பொடியில். ஒரு சிட்டிகை
அளவு எடுத்து 4 சொட்டு போல் தேன் விட்டுக் குழைத்து குழந்தையில் நாக்கில்
தடவி விடவும், அதைக் குழந்தை முகத்தை சுளித்து ஒருவழியாய் விழுங்கினால்
பாருங்கள். இல்லாவிட்டால் (பனை வெல்லம் இருந்தால் வெல்லச்சாறு அல்லது
தேனிலேயே கொஞ்சம் நீர் கலந்து (பால் போல் நீர்க்க‌) ஓமப்பொடியைக் கரைத்து
பாலாடையில் வைத்து ஊற்ற‌ வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளை
தாராளமாகக் கொடுக்கலாம். அதே போல் ஓமத்தைப் பொரிய‌ விட்டு(தேவையான‌
அளவு சட்டியில் போட்டு) ஒரு தம்ளர் தண்ணீரில் போட்டு பாதியாகச் சுண்ட‌
வைத்து பிறகு அதில் தேவையான‌ அளவு பனைவெல்லம் போட்டு சிரப் போல‌
செய்து வைத்துக் கொள்ளுங்கள், பிறகு தினமும் காலையில் பால் குடித்த‌ பிறகு
கால் அல்லது அரை தேக்கரண்டி அளவு பாலாடையில்போட்டுகுடிக்கவைக்கவும்
நான்கு நாள் பாருங்கள்.எப்படி இருக்கிறது. இது குடித்த‌ பிறகு வயிறு உப்புசம்
உள்ளதா என்று பாருங்கள். மலம் போகும்போது முன்பு நாற்றம் இருந்ததா?
ஓம‌ நீர் குடித்த‌ பின் நாற்றம் உள்ளதா என்று பாருங்கள். பின்பு தேவையைப்
பொருத்து ஓம‌ சிரப்பைத்தரவும் ஒரு நாளைக்கு ஒரேமுறை போதும். தேவையானால் மறு முறை தரலாம் சிறு குழந்தை ஆதலால் கவனம் வேண்டும்
ஓமம் எந்த‌ விதத்திலும் தீங்கு ஒருனாளும் செய்யாது, அதனால் பயம் வேண்டாம். இன்று இரவே கொடுங்கள். இரவிற்குள் நல்ல‌ பலன் தெரியும்.
எந்த‌ மருந்தையும் தேனில் அல்லது வெல்லத்தோடு தரலாம் குணம் மாறாது.
குழந்தைகளுக்கான பதிவுகளை ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பாருங்கள்
நிறையக் கிடைக்கும்,
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Thanks nga poongothai amma neenga solrathu yellam romba usefula irukku.

அன்புள்ள‌ சத்தியா,
இப்போது பாப்பாவிற்கு வயிறு சரியாகி விட்டதா?
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Konjam konjam poranga amma but thornaatram varuvathu illai innum oma water kodukiren

Doctor kudutha powder koduthalum did not stop one week avathu pogum doctor ta sonna it is normal he did not take feeding that time only problem nu.

Na weekly one time karuvadu,one time mutton,and remaining days I take athigama keerai afternoon only I take this.ithunala problem varuma.

Activeva iruppa but namaku patha konjam elaitha mathiri iruppa stop agi after 2 days patha ok va theriva

அன்புள்ள‌ சத்தியாவிற்கு,
குழந்தை தானாகத் தண்ணீர் குடிக்காது. உப்பும் சர்க்கரையும் கரைத்த‌ தண்ணீர்
பாலாடையில் ஊற்றி குடிக்கவைக்கவும். பேதி ஆகிறதே என்று தண்ணீர் கொடுக்காமல் விட்டால் குழந்தை கீரைத்தண்டு போல் துவண்டு போகும்.
அப்புறம் சலைன் தண்ணீர் ஏற்ற‌ வேண்டி வரும்.
காலைவேளையில் கீரை உண்ணவும். மதியத்திற்கு மேல் வேண்டாம்.சில‌
நாளைக்கு அசைவத்தினை நிறுத்தி விட்டு பதிலாக‌ பூண்டு அதிகம் சேர்த்துக்
கொள்ளவும். சரியாக‌ பதப்படுத்தாத‌ மாமிச‌ உணவுகளும் தொல்லை தரலாம்
பழைய‌ பதிவுகளைப் பாருங்கள் ஒரு காரக் குழம்பு (பிள்ளை பெற்றவர்களுக்கானது.) செய்து மாம்பருப்பு அரைத்து செய்யும் குழம்பு,
ஊறுகாய் உப்பிட்ட‌ நாரத்தங்காய் மிக‌ நல்லது, இருவருக்கும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்