கோல்டன் ப்ரெட்

தேதி: February 10, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரெட் துண்டுகள் - 5
மிளகாய்தூள் - ஒரு ஸ்பூன்
மசாலாத்தூள் - அரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - அரை ஸ்பூன்
வெங்காயம் - பாதி
உப்பு - 3/4 ஸ்பூன்
கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
அரைப்பதற்கு :
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
மல்லிக்கீரை - ஒரு கொத்து
உப்பு - ஒரு சிட்டிகை


 

ப்ரெட் துண்டுகள் ஒவ்வொன்றையும் சதுரவடிவ 4 துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை கேரட் துருவும் பலகையில் துருவிக்கொள்ளவும்.
அரைப்பதற்கு கூறியுள்ளவற்றை விழுதாக அரைத்தெடுத்து, அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, துருவி வைத்துள்ள வெங்காயம், உப்பு, பொடி வகைகள், மாவு வகைகளை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் குழைக்கவும்.
ப்ரெட் துண்டுகளின் இரண்டு பக்கங்களையும் இந்த கலவையில் நனைத்து, தோசைக்கல்லில் பொரியுமளவு எண்ணெய்விட்டு பொன்னிற முறுகலாகும்வரை சுட்டு எடுக்கவும்.
இதை புதினா சட்னி அல்லது தக்காளி கெட்சப்புடன் பரிமாறலாம்.


இது சுலபமான, சுவையான மாலை நேர சிற்றுண்டி. குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் பச்சை மிளகாயின் அளவை குறைத்துக் கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நோன்பு திறக்க செய்து பார்த்தேன்.ரொம்ப அருமையாக இருந்தது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் அஸ்மா அக்கா,
இன்று ஈவினிங் ஸ்னாக்ஸ்க்கு கோல்டன் ப்ரெட் செய்திருந்தேன். வீட்டில் எல்லாருக்கும் ரொம்ப பிடித்திருந்தது. இங்கு ஒரு வாரமா நல்ல மழை, இன்று வீடு திரும்பியதும், இது செய்தேன். வெளியே மழை பெய்துகொண்டு இருக்கும்போது சாப்பிட, சூடான டீயுடன் இந்த ஸ்னாக் ஐய்ட்டம், சூப்பரான மேட்ச்சிங்கா சுவையாக இருந்தது. இந்த சுவைமிகு குறிப்புக்கு நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ