தோழிகள் கொஞ்சம் உதவுங்கள் தயவு செய்து உதவுங்கள்.....pls pls pl

தோழிகளே... எனக்கு உதவுங்கள் எனக்கு 2 வயது குழந்தை இருக்குறாள். நாங்கள் 2வது குழந்தைக்கு 1வருசம் 3 மாதமா முயற்சி செய்றோம் இன்னும் உண்டாகவில்லை. நான் என்ன மாறி சாப்பாடுலாம் சாப்டனும் எப்படிலாம் இருக்கனும் சொல்லுங்கள். எனக்கு எங்க வீட்டுல ஓய்வு இருக்கவே மாட்டக்குது இரவு மட்டும் தான் ஓய்வு அதும் தூஙுவதற்க்கு 11.30 அல்லது12 ஆகுது இதனால் கரு உன்டாகுரது தடைபடுமா

Pls suggest me all sisters.... Pls pls

குழந்தைக்கு இரண்டு வயது, ஒரு வருஷமா அடுத்த‌ குழந்தைக்கு முயற்சிக்கிறீங்க‌ என்றால் ஏறக்குறைய‌ குழந்தைக்கு 1 வயதானதில் இருந்து?? தாய் பால் 1 வயதுவரை கொடுத்தீங்களா? இல்ல‌ 6 மாதம் தானா? ஒரு வயது வரை தாய்ப்பால் கொடுத்திருந்தா, அதுவும் கருதரிக்காம‌ இருக்க‌ காரணமா இருக்கலாம். ஒரு பிள்ளையை பார்க்கும் போதே ஓய்வே இல்லை என்கிறீர்கள்... இன்னும் ஒன்று இப்போதேவா? சிந்தித்து முடிவெடுங்கள். முதல் குழந்தைக்கு எந்த‌ வைத்தியமும் பார்க்காமல் தான் கரு நின்றதா? அப்படியானால் இரண்டாவது உண்டாக‌ சிரமம் இருக்க‌ வாய்ப்பு குறைவு தான். நல்ல‌ உணவு, நேரத்துக்கு சாப்பிட்டு, சரியான‌ தூக்கம், சரியான‌ நேரத்துக்கு தூக்கம்... இப்படி வழக்கத்தை மாற்றுங்க‌. அப்ப‌ தான் உடம்பு செட் ஆகும். அப்படியும் சிரமம் இருந்தது என்றால் மருத்துவரை பார்ப்பது நல்லது. ஒருவேளை நீங்க‌ வீக்கா இருக்கலாம் இல்லையா? ஏன்னா இப்ப‌ தானே குழந்தைக்கு இரண்டு வயதாகுது... அதன் பின் ஓடவே சரியா இருக்கும். எது எப்படியோ என் அட்வைஸ் ஒன்னு தான்... ஆரோக்கியமான‌ பிள்ளையை பெற்று வளர்க்க‌ முதல்ல‌ தாய் ஆரோக்கியமா இருக்கணும். அதனால் முதல்ல‌ உங்க‌ உடம்பை ஆரோக்கியமா ஆக்குங்க‌, அப்பறம் இரண்டாவது பிள்ளையையும் சேர்த்தே இந்த‌ நேரம் நல்லபடியாக‌ வளர்க்க‌ இயலுமா என்பதையும் சிந்தியுங்கள்... பின் முயற்சி செய்யுங்கள். இது என் கருத்து மட்டுமே... ஏனென்றால் அடுத்தடுத்து பிள்ளை நின்றதால் என் இரண்டாவது பிள்ளை எவ்வளவு வீக்கா இருக்கான்னு பார்க்கறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வானி அக்கா பதில் அளித்ததற்கு நன்றி... முதல் குழந்தை 5மாதம் கழித்து தான் உன்டாகினாள்.. வைத்தியம் ஏதும் இல்லை. மலைவெம்பு குடித்தேன்.. பாப்பா என்னை தொந்தரவு செய்வதில்லை அக்கா. வீட்டில் வேலை அதிகம் ஏனென்றால் மிகவும் பெரிய வீடு. கூட்டு குடும்பமாக இருந்துசு இப்போ எல்லாரும் தனித்தனியாக போயிட்டாங்க இப்ப தனி ஆளா பாத்துக்க கச்டமா இருக்கு அவ்வலோ தான். பிள்ளைங்களுகுள் இடைவெளி 1ய்ர் மட்டும் இருக்கனும்னு ஆசை படுரேன் என் கூட பிறந்த அண்ணன் தங்கசிக்கும் எனக்கும் இடைவெளி அதிகம் அதனால் நாங்க ரொம்ப
டச்சிங்ல இருந்தது இல்லை அதான். எவலோ வேலை இருந்தாலும் என்னால் என் குழந்தையை நல்லா பாதுக்குவேன் அதுல நம்பிக்கை இருக்கு. நான் 8 மாதம் வரை தான் பால் குடுத்தேன். அதன் பிறகு நவல் குடிக்க மடேன்ட்டாள். எனக்கு அடுத்து ஒரு குழந்தை வெனும்னு ரொம்ப ஆசை அதான்

Pls answer pannunga sisters

//இன்னும் உண்டாகவில்லை. நான் என்ன மாறி சாப்பாடுலாம் சாப்டனும்// சாப்பாட்டால் குழந்தை உண்டாவது இல்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் இல்லையா!

//எப்படிலாம் இருக்கனும்// இப்படியெல்லாம் இருக்கக் கூடாது. :-) சாதாரணமா இருங்க. இதைப் பற்றி யோசிக்காம இருங்க. பிடித்ததைச் செய்துகொண்டு சந்தோஷமாக இருங்க.

//எனக்கு எங்க வீட்டுல ஓய்வு இருக்கவே மாட்டக்குது// ம். //இரவு மட்டும் தான் ஓய்வு அதும் தூஙுவதற்க்கு 11.30 அல்லது12 ஆகுது// ம்... //இதனால் கரு உன்டாகுரது தடைபடுமா// இல்லை.

//பாப்பா என்னை தொந்தரவு செய்வதில்லை// என்கிறீங்க. அப்போ வீட்டையும் குழப்பி வைக்க மாட்டாங்க. //வீட்டில் வேலை அதிகம் ஏனென்றால் மிகவும் பெரிய வீடு.// & //இப்ப தனி ஆளா பாத்துக்க கச்டமா இருக்கு// ஏன் பார்த்துக்கணும்!! குப்பையாக்கினால்தான் சுத்தமாக்க வேண்டும். இரண்டிற்கும் சேர்த்து நேரம் எடுக்கும். பாப்பா குப்பையாக்கல, நீங்க நினைச்சா உங்க வேலையைக் குறைக்க முடியும். ப்ளான் பண்ணுங்க. டெய்லி முழு வீட்டையும் சுத்தம் பண்ணத் தேவையில்லை. அதிகம் பயன்படுத்தாத அறைகளை வாரம் ஒரு தடவையோ மாசம் ஒரு தடவையோ சுத்தம் செய்தால் போதும். வேலைகளைக் கொஞ்சம் கொஞ்சம் அங்கங்க பிடிச்சுக்கங்க. கிடைக்கிற நேரத்தைக் குழந்தையோட பேச, கொஞ்சுறதுக்கு செலவு பண்ணுங்க. வெளியே அழைச்சுப் போங்க. உங்களுக்கு ஓய்வும் ஆச்சு, குழந்தைக்கு சந்தோஷமும் ஆச்சு. மனசுக்கும் நல்லது.

//பிள்ளைங்களுகுள் இடைவெளி 1ய்ர் மட்டும் இருக்கனும்னு ஆசை படுரேன்// இனி ஆசைப்பட்டு என்ன பயன்! :-) இடைவெளி ஏற்கனவே அதை விடக் கூடுதல் ஆகிப் போச்சு. //அதனால் நாங்க ரொம்ப டச்சிங்ல இருந்தது இல்லை// 'அதனால' என்று இல்லை. இந்த இடைவெளிகள் தானா இடைவெளிகளையும் நெருக்கத்தையும் நிர்ணயிக்கிறது! தனி மனித குணாதிசயம்தான் எல்லாவற்றுக்கும் காரணமே தவிர தாய் கர்ப்பம் தரிக்கும் இடைவெளி அல்ல. எதையும் 'இப்படித்தான்' இதனால்தான்' என்று முடிவாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.

குழந்தை கிடைக்கும் போது கிடைக்கட்டும். இருக்கிற குழந்தையைக் கொஞ்சலாம் இப்போது. இப்போது இந்தக் குழந்தைக்குக் கிடைக்கும் கவனிப்பு, அடுத்த குழந்தை வந்ததும் கொஞ்சமாவது குறையும் என்கிறதை நீங்க மறுக்க முடியாது. இருக்கிற குழந்தை இன்னும் கொஞ்ச காலம் தனியே அம்மா, அப்பாவின் பாசத்தை அனுபவிக்கட்டுமே!

‍- இமா க்றிஸ்

// என் கூட பிறந்த அண்ணன் தங்கசிக்கும் எனக்கும் இடைவெளி அதிகம் அதனால் நாங்க ரொம்ப
டச்சிங்ல இருந்தது இல்லை அதான். // ‍ இது தான் ஒத்துக்க‌ முடியல‌, அதிக‌ இடைவெளி இருந்தால் ரொம்ப‌ பாசமா குழந்தையை பார்த்துக்குறாங்கன்னு சொல்லி கேட்டிருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களுக்கு என்கஷ்டம் புரியல.... குழந்தை என்னிடம் ஒட்டிக்கொண்டு இருக்க மாட்டாள் அவள் தனியா விளையாடுவாள்னு சொன்னேன்... வீட்டை குப்பை ஆக்காத குழந்தைகள் உண்டா 4 நேரம் வீட்டை பெருக்க வைத்து விடுவாள் இதையெல்லாம் தொந்தரவாக என்னால் நினைக்க முடியல. எனக்கு பதில் அளித்ததுக்கு நன்றி.. எனக்கு குழந்தை வேண்டாம் என்கிற மன நிலைக்கு நான் வந்துடேன்... எனக்கு இருக்கும் என் ஒரு குழந்தை மட்டும் எனக்கு போதும்....

Indha vaarthai ellaam solla kuudaadhu. Kuzandhai kidaikkum. Ninga ippadi kavalai pattaa kuzandhai nikkaama thalli pogum adhanaal dhaan ippadi kuzappikkaadhinga amaidhiyaa irunganu solrom. Unga udambum nilamaiyum kuzandhaiyai paarthuka mudiyumaanu yosikka sonnom. Nichayam idhil engal nalan edhuvum illa.. anubavam ullavargal adhanaal vara kudiya pirechanaigalai therindhiruppadhaal sindhikka sonnoom. Een kobam dhivya??? Siringa... azagaana kutty pirapaanga... feel pannaama amaidhiyaa irunga.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//உங்களுக்கு என்கஷ்டம் புரியல.// மன்னிச்சுக்கங்க திவ்யா. எங்களுக்கு உங்களைக் குழப்பணும் என்று ஆசையா என்ன! யார் கஷ்டமும் இன்னொருத்தருக்கு 100% புரியாதுங்க. புரிஞ்சுக்க முயற்சிக்கிறோம், உதவ நினைக்கிறோம், அவ்வளவுதான். அதுவும் நாங்களா உங்களைத் தேடி வரல. நீங்கதான் உதவி கேட்டீங்க. பலருக்கு பதில் சொல்ல நேரம் கிடைக்காமல் விட்டுப் போயிருக்கிறேன். பிறகு வந்து பார்த்தால்... 'யாருமே பதில் சொல்லல,' என்று கவலையாக ஒரு கமண்ட் இருந்திருக்கிறது. உங்களுக்கு உடனே பதில் கிடைத்திருக்கிறது.

இது தீர்வும் இல்லை, நீங்கள் நான் சொல்வதைக் கேட்டு நடக்கவேண்டும் என்னும் அவசியமும் இல்லை. படியுங்கள், பிடித்தால் எடுத்துக் கொள்ளுங்கள். அல்லாவிட்டால் ஒதுக்கிவிடவேண்டுமேயொழிய யாரென்றே தெரியாத ஒரு இமா சொல்கிற பேச்சையெல்லாம் மனதில் போட்டுக் குழப்புவீர்களா என்ன!

ஒருவரது எழுத்தை வைத்து, சிலதை ஊகித்து பதில் சொல்வதேயொழிய, இங்கு யாரும் யார் பிரச்சினையையும் தெரிந்து வைத்துக் கொண்டு பதில் சொல்லவில்லை சகோதரி.

//எனக்கு குழந்தை வேண்டாம் என்கிற மன நிலைக்கு நான் வந்துடேன்... எனக்கு இருக்கும் என் ஒரு குழந்தை மட்டும் எனக்கு போதும். // கர்ர்ர்... இங்கு இன்னமும் ஒரு பக்கம் தாண்டவில்லை. அதற்குள் நீங்கள் எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வரலாம்! நீங்க ரொம்ப சென்சிட்டிவ்வா இருக்கீங்க. மன்றத்தில் ஒரு கேள்வியை வைத்துவிட்டு நீங்கள் விரும்புவதையே எல்லோரும் பதிலாகச் சொல்ல வேண்டும் என்று நினைப்பது சரியா! எல்லா விதமாகவும் தான் பதில் கிடைக்கும். நாளை கூட நான்கு பேர் வரலாம். அவர்கள் பதில் உங்கள் மனதுக்குப் பிடித்ததாக இருந்திருக்கலாம். அவசரப்படக் கூடாது.

உங்களுக்கு நல்லது நினைத்துத்தான் பதில் சொன்னேன். நான் உங்கள் அம்மாவும் இல்லை, அத்தையும் இல்லை. காற்றலையில் வரும் உருவமில்லாத ஒர் அரூபி. என் பேச்சையெல்லாம் மனதில் போட்டுக் குழம்பக் கூடாது. பிடிக்கலயா, தூக்கித் தூரப் போட்டுட்டு அமைதியா, சந்தோஷமா இருங்க.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

This s my first letter. யார் மனமுமம் புண்படமா கருத்த பகிர்வது எனக்கு பிடித்து இருக்கிறது. தோழி நாம் எதிர் பார்க்காத போது நாம் எதிர் பார்பதை கொடுப்பவர் கடவுள் So அவர் மேல பாரத்தை போட்டு சந்தோசமா இருங்க.எல்லாம் உங்கள் மனம் போல அமையும். நினைத்த உடன் கிடைத்தால் அதன் அருமை தெரியாது

மேலும் சில பதிவுகள்