குழந்தைக்கு உணவு

வணக்கம் தோழிகளே ரொம்ப நாள் பிறகு அறுசுவை தளத்திற்கு வந்துள்ளேன் என் பையன் இப்போது 2வயது 6மாதம் ஆகிறது.ஸ்கூல் போகிறான்.மதியம் 3 மணிக்கு வருவான்.அவனுக்கு எந்த மாதிரியான உணவு குடுக்க வேண்டும் என்று கூறுங்கள் தோழி....ஸ்கூலில் அவனுக்கு சாப்பாடு குடுக்கிறார்கள்...

//2வயது 6மாதம்// எல்லா உணவுகளும் செரிக்கக் கூடிய வயதுதான்.
//அவனுக்கு எந்த மாதிரியான உணவு குடுக்க வேண்டும்// நீங்கள் சாப்பிடும் எல்லாமே கொடுக்கலாம். நீங்கள் சத்தான உணவுகளைச் சரியான அளவில் சாப்பிடுவீர்கள் என்று நம்புகிறேன். அதே போல குழந்தைக்கும் கொடுங்கள் போதும். சாதாரணமாக நீங்கள் காரம் அதிகம் சேர்ப்பவரானால் இனி குழந்தைக்காக கொஞ்சம் காரம் குறைவாகச் சமைக்கலாம். உங்களுக்கும் நல்லது.

//ஸ்கூலில் அவனுக்கு சாப்பாடு குடுக்கிறார்கள்.// என்ன கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அங்கு எந்தெந்த உணவு (சத்துக்கள்) கிடைப்பது குறைவாக இருக்கிறது என்பதைக் கவனித்து நீங்கள் கொடுக்கும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்