கேரட் ஹல்வா

தேதி: June 19, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

 

கேரட் - அரைக் கிலோ ( துருவிக் கொள்ளவும் )
பால் - அரை லிட்டர்
சர்க்கரை - 350 கிராம்
பால்கோவா - 100 கிராம்
நெய், முந்திரி, ஏலக்காய் - தேவையான அளவு


 

வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
பால் கொதித்ததும் அதில் துருவிய கேரட் சேர்த்து வேக விடவும்.
பால் சுண்டி கேரட் வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை சேர்த்ததும் கலவை தளர்ந்து வரும்.
பால், சர்க்கரையுடன் கேரட் சேர்ந்து கெட்டியான பதம் வந்ததும் பால்கோவா மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
நெய் சேர்த்து கலந்து விட்டு வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.
சுவையான கேரட் ஹல்வா தயார். வெணிலா ஐஸ்க்ரீமுடன் பரிமாறவும்.

பால்கோவா சேர்ப்பதால் சர்க்கரையின் அளவை குறைத்துக் கொள்ளவும். இல்லையெனில் கேரட்டின் சம அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா. இவ்வளவு பாஸ்ட்டா வேலை பார்க்கறீங்களே.நன்றி அட்மின் அண்ணா & அறுசுவை டீம்

Be simple be sample

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா... இப்படி ஸ்வீட்டு ஐஸ்க்ரீம்னு கோல்டா இருக்க‌ பிள்ளைக்கு படங்காட்டி ஃபீல் பண்ண‌ வைக்கிறீங்களே. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நாங்க சொல்ல வேண்டிய டயலாக்லாம் நீங்க சொல்றீங்களேம்மா ;) ஸ்வீட்டும் ஐஸ்க்ரீமும் ஆஹா கலக்குது போங்க :) (y)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹி ஹி ஹி தான்க்யூ வனி. கோல்டு இருந்தா பரவாயில்ல சாப்பிடுங்க.

கிகிகி சுவா. தான்க்யூ

Be simple be sample

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை இது போன்று நானும் சமையல் வகைகளை அளிக்க உள்ளேன். keep support me

https://play.google.com/store/apps/dev?id=4702890658323381984