பால் கட்டுதல்

எனக்கு 2 வயதில் ஒரு பையன் இருக்கிறான்.... நான் 1 1\2 வயதில் அவனுக்கு பால் தருவதை நிறுத்தி விட்டேன்... ஆனால் எனக்கு இப்போது பால் கட்டுகிறது என்ன செய்வது

எப்போதும் லைட்டா பால் இருக்கும்... இப்போது சிறு கட்டியாக இருப்பதபோல் உணருகிறேன்...

மார்பில் கட்டி... கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயம். நிச்சயம் நீங்கள் சொல்வது போல பால்தான் கட்டிக்கொண்டிருக்கிறது என்றால், இடைக்கிடை வெந்நீர் ஒத்தடம் கொடுக்க, கொஞ்சம் மசாஜ் செய்து விட மெதுவாகக் கரைந்துவிடும். இரண்டு நாள் பாருங்க. பிறகும் கட்டி இருப்பது போல இருந்தால் காட்டிருங்க.
~~~
//enakku eppadi thalaipil poi kelvi kettapathu endru theriyavillai..// மேலே பாருங்க. சர்ச் பாக்ஸ் தெரியுது இல்ல! அங்கே பொருத்தமான சொல்லைத் தட்டச்சு செய்து தேடினால் தொடர்பான இழைகள் எல்லாம் தெரியும். விரும்பியதைத் தட்டிப் படிக்கலாம்.
~~~~

:-) இப்போதான் பார்த்தேன், புதுசா நாலு த்ரெட் தெரியுது. :-)
புது த்ரெட் ஆரம்பிக்காம மேலே நான் சொன்னது போல தேடிப் பாருங்க. ஏற்கனவே அதே தலைப்புகள்ல பேசின இழைகள் கிடைக்கும். பிறகு பொருத்தமானதுல உங்கள் கேள்வியை வைக்கலாம். முதல்ல ஏற்கனவே அறுசுவைல உங்க சந்தேகம் போல யாராவது பேசி இருக்காங்களான்னு தேடிப் பார்த்துக்கங்க. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு த்ரெட் ஆரம்பிச்சா ஒன்றிரண்டு பதில்களோட அந்த த்ரெட் முடிஞ்சுரும். இங்கு முகப்பிலும் ஏற்கனவே இருக்கிற த்ரெட் எல்லாம் காணாமல் போயிரும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்