தோழிகளே என் மாமனாருக்கு சர்க்கரை வியாதி உள்ளது அவருக்கு என் மாமியார் தினமும் இரவு 1 1/2 பாக்கெட் அல்லது 1பாக்கெட் பால் குடிப்பதற்க்காக குடுக்கிறார் இப்படி குடுப்பது சரியா?
தோழிகளே என் மாமனாருக்கு சர்க்கரை வியாதி உள்ளது அவருக்கு என் மாமியார் தினமும் இரவு 1 1/2 பாக்கெட் அல்லது 1பாக்கெட் பால் குடிப்பதற்க்காக குடுக்கிறார் இப்படி குடுப்பது சரியா?
பாலும் சர்க்கரையும்
//தினமும் இரவு 1 1/2 பாக்கெட் அல்லது 1பாக்கெட் பால்// அங்கு ஒரு பாக்கட் எத்தனை மில்லி என்பது தெரியவில்லை. இரவு உணவோடு ஒரு கப் - 250 மில்லிலீட்டர் குடிக்கலாம். (இது பாலைக் காய்ச்சும் முன் எடுத்துக்கொள்ளும் அளவு.) தப்பு இல்லை. பாலுக்குச் சர்க்கரை சேர்க்காமலிருப்பது முக்கியம்.
ஒரு நாளின் மீதிப் பொழுதில் எடுத்துக் கொள்ளும் பாலின் அளவைப் பொறுத்து, இரவில் பால் குடிப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம். பால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டாது. நோயாளிக்கு எடை குறைப்பது பற்றி மருத்துவர் அறிவுறுத்திருந்தால், பாலின் அளவைக் குறைக்கலாம் அல்லது ஆடை நீக்கிய பால் எடுக்கலாம்.
- இமா க்றிஸ்
இமா
நம்ம ஊரில் ஒரு பாக்கட் என்றால் பொதுவா 1/2 லிட்டர்... அவ்வளவு எப்படி குடிக்க முடியும்!! 250 மில்லி பாக்கட்டா இருக்குமோ? 250 / 500 / 1 லிட்டர் என பாக்கட் வருது இந்தியாவில். எதுவா இருந்தாலும் பால் சர்க்கரை போடாம குடிச்சா ஒன்னும் பண்ணாது தானே?? எனக்கு தெரிந்து சர்க்கரை உள்ளவர்கள் சர்க்கரை சேர்க்காம 4 டீ (பால் சேர்த்தது) கூட குடிக்கிறாங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பாலும் சர்க்கரையும்
//எதுவா இருந்தாலும் பால் சர்க்கரை போடாம குடிச்சா ஒன்னும் பண்ணாது தானே?// பாலிலிருப்பது மால்டோஸ்தான். ஆனாலும் அளவோடு குடிப்பதுதான் நல்லது. சர்க்கரை நோயாளர்களுக்கு எடை சரியாக இருக்க வேண்டும் இல்லையா! பால்... கொழுப்பு... எடையைக் கூட்டிக் கொண்டால் இன்சுலின் சுரப்பு குழம்பிப் போகும். லைட் மில்க், க்ரீன் மில்க், ஸ்கிம்ட் மில்க் என்று பார்த்து வாங்க முடிந்தால் கொள்ளளவைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்பட வேண்டி இராது.
//சர்க்கரை உள்ளவர்கள் சர்க்கரை சேர்க்காம 4 டீ (பால் சேர்த்தது) கூட குடிக்கிறாங்க.// :-) இது ஆட்களைப் பொறுத்தது வனி. 12 வருடங்களாக சர்க்கரை உள்ளவங்க இதுவரை மாத்திரை, இன்சுலின் ஊசி என்று எதுவுமே இல்லாமல்... ஐஸ்க்ரீம் கூட சாப்பிடுறாங்க இங்கே. :-) சாப்பிடவே கூடாது என்று இல்லை அவரவருக்கு உள்ள பிரச்சினையின் அளவு, தன்மை, மீதி என்னவெல்லாம் சாப்பிடுகிறார்கள், உடற்பயிற்சி எவ்வளவு கிடைக்கிறது என்று பலதையும் பொறுத்தது இது. நோயாளி தன் நிலையை உணர்ந்து ஆராய்ந்து பார்த்து நடப்பவரானால், அவருக்கு எப்போ எப்படிச் சாப்பிடுவது பாதுகாப்பு என்பது புரியும்.
- இமா க்றிஸ்
imma amma
skimmed milk,light milk na எந்த மில்க் பாக்கெட் வான்கலாம்??/அரொகிய,ஆவின் இது மாதிரி பாக்கெட் ல கிடைக்குமா???
இமா அழைக்கிறேன்
:-) எனக்கு ஆரோக்கியா, ஆவின் எதுவும் தெரியாதே சத்யா!
யாராவது இந்தியர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். உதவுவீர்களா அறுசுவையோரே!
- இமா க்றிஸ்
milk
Aavin, heritage egapatta brand la egappatta variety varudhunga. Kadaiyil kelunga... ovvoru colour packm diff dhaan. Aavin la nichayam undu.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
திவ்யா
உங்௧ள் மாமனார் ௧டையில் வாங்கும் பாலின் அளவு 1\4 லிட்டர்,1\2 லிட்டர்,1லிட்டர் என்று அளவில் உள்ளது
எத்தனை லிட்டர் வாங்கினாலும் சரி ஒரு நாளைக்கு காலையில் 1கப் பால்,இரவு 1௧ப் பால் இனிப்பு இல்லாமல் குடித்தால் போதுமானது
அதி௧மா௧ பால்,டீ,காபி போன்றவை௧ளை அளவோடு குடித்தால் நல்லது
ML
VANI AKKA
aavin blue pocket skimmed milk ah?.actually ah fat evlo percentage irukanum milk la???therinja next time check panni vanguven
Ippa vara ella pokket millkum
Ippa vara ella pokket millkum fat eduthathuthan, so neenga bayapda venam, sugar sethama kodunga, mudunja alavu pocket milk vaangama anga milk socity iruntha anga poi vangunga pa
thanks kiruthiga
thanks pa.ippa cow milk vanga kuda payama iruku.mattuku gARMONE injection poduratha soltranga