தேதி: June 23, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சிக்கன் - அரைக் கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தயிர் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, இலை - தலா ஒன்று
சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து அதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, தயிர் சேர்த்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, இலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.

அதனுடன் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து உப்பு, காரம் தேவையெனில் தனி மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். அப்படியே மூடி போட்டு சிம்மில் வேக விடவும்.

சிக்கனில் தண்ணீர் வெளிவரும் என்பதால் தண்ணீர் சேர்க்க தேவையில்லை. இடையிடையே திறந்து நன்கு கிளறி விடவும்.

சிக்கன் பாதி வெந்ததும் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு கிளறி மீண்டும் மூடி வேக விடவும்.

தண்ணீர் சுண்டி சிக்கன் நன்கு வெந்ததும் இறக்கி கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

Comments
how to rid of from dark
how to rid of from dark circles under the eyes
பாலா
ஈசியான சுவையான குறிப்பு சூப்பர் பாலா :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
நன்றி டீம்
எனக்கு உதவியாக இருந்து குறிப்பை அழகாக வெளியிட்ட டீமிற்கு நன்றிகள் பல.
எல்லாம் சில காலம்.....
சரண்யா
இதை நீங்கள் மன்றத்தில் கேட்க வேண்டும். எனினும் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். உருளை (அ) வெள்ளரியை வட்ட வட்டமாக நறுக்கி கண்ணின் மேல் வைத்து 15 நிமிடம் கண்ணை மூடி ஓய்வு எடுக்க காயின் சாறு இறங்கி கருவிழி குறையும்.
எல்லாம் சில காலம்.....
ஸ்வர்ணா
நன்றி ஸ்வர்ணா. செய்து பாருங்க. அப்றம் எப்பவும் இதையே தான் செய்வீங்க.
எல்லாம் சில காலம்.....