மீன் சூப்

தேதி: June 24, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

சதைப்பற்றுள்ள மீன் - 6 துண்டுகள்
இஞ்சி - ஒரு செ.மீ
பூண்டு - 3 அல்லது 4 பல்
சின்ன வெங்காயம் - 5 அல்லது 6
பட்டை - ஒரு சிறிய துண்டு
அன்னாசிப்பூ - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
மிளகு தூள் - ஒரு மேசைக்கரண்டி
வெங்காயத்தாள் (Spring onions) - தேவையான அளவு (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
சூப் இலை - விருப்பப்பட்டால்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய் மூன்றையும் இடித்து வெள்ளை துணியில் முடிந்து வைக்கவும்.
இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் மூன்றையும் தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.
மீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக மாறி வாசம் வரும் வரை வதக்கவும்
பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் முடிந்து வைத்துள்ள பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, ஆகியவற்றை சேர்க்கவும். நீர் கொதிக்க தொடங்கும் போது, மீனை சேர்க்கவும். அதனுடன் மிளகு தூள் மற்றும் உப்பை சேர்க்கவும்.
கடைசியாக வெங்காயத்தாள் மற்றும் சூப் இலையை சேர்க்கவும்.
சுவையான மீன் சூப் தயார். இதனை சாதத்துடனும் சாப்பிடலாம் அல்லது டயட்டில் இருப்பவர்கள் அப்படியே அருந்தலாம். காரமில்லாததால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Muzu miin soup... paarkave super. Vaazthukkal :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//கடைசியாக வெங்காயத்தாள் மற்றும் சூப் இலையை சேர்க்கவும்.// சூப் இலை என்று எதைச் சொல்லியிருக்கிறீர்கள் என்று புரியவில்லை. அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

‍- இமா க்றிஸ்

சூப் இலை பார்க்க மல்லிக்கீரை போல இருக்கும்.ஆனால் வாசனை முற்றிலும் வேறு. இது ஒருவகை பார்ஸ்லி. Daun Soup அப்படீன்னு கூகுள் பண்ணிப் பாருங்க இமாம்மா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கவி. பார்த்தேன், அறிந்து கொண்டேன் :-)

‍- இமா க்றிஸ்

குறிப்பினை வெளியிட்ட‌ அறுசுவை டீமுக்கு மிக்க‌ நன்றி. எனது ஆர்வத்தை அதிகரித்திருக்கிறீர்கள். தொடர்ந்து சுவையான அதே சமயம் எளிமையான குறிப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன். கருத்துக்களை பதிவு செய்த தோழியர்களுக்கும் நன்றி.

நடப்பதெல்லாம் நன்மைக்கே

மீன் சூப் குறிப்பை வெளியிட்ட அன்றே லஞ்ச்க்கு செய்தேன், நல்லா இருந்தது கவிப்பிரியா, நன்றி

கருத்துக்கு மிக்க நன்றி வாணி.

நடப்பதெல்லாம் நன்மைக்கே

நன்றி,,,

பாபா நடமாடும் உணவகம் ( ரெய்கி குணா )
பேஸ்புக் :பாபா உணவகம் Facebook :babaunavagam / reikiguna