சன்னா மசாலா

தேதி: June 25, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (5 votes)

 

மூக்குகடலை - கால் கிலோ
வெங்காயம் - 4
தக்காளி - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
மிளகு - அரை தேக்கரண்டி
பட்டை - 2
லவங்கம் - 2
சோம்பு - ஒரு தேக்கரண்டி
தனி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
சன்னா மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சம் பழம் - பாதி


 

மூக்குகடலையை இரவே ஊற வைத்து காலையில் எடுத்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்த மூக்கடலையில் சிறிது தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, மிளகு, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் தாளித்து 2 வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றுடன் தூள் வகைகளை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வேக வைத்த மூக்குகடலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
இந்த கலவையுடன் தனியாக எடுத்து வைத்த மூக்குகடலையை அரைத்து சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து கொதித்து கெட்டியானதும், எலுமிச்சம் பழம் பிழிந்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சப்பாத்தி, பூரி மற்றும் நாண் வகைகளுக்கு ஏற்ற சன்னா மசாலா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Dhaba la serve panna maadhiri irukku :P eppadimaa ippadilaam panringa!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்& டீம் நன்றி.

Be simple be sample

தான்க்யூ வனி. அப்படியா இருக்கு .:)

Be simple be sample

ரேவ்ஸ் செம்ம படமும் குறிப்பும் கலக்குது :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Thanku swa

Be simple be sample