உருளைக்கிழங்கு கபாப்

தேதி: February 11, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

ப்ரெட் - 8 துண்டுகள்
உருளைக்கிழங்கு - 300 கிராம்
பச்சை மிளகாய் - 6
மல்லிக்கீரை, புதினா - தலா 2 கொத்து
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
மசாலாத்தூள் - ஒரு ஸ்பூன்
மிளகாய்தூள் - ஒரு ஸ்பூன்
அரிசி மாவு - கால் கப்
எண்ணெய் - 400 மில்லி
உப்பு - 3/4 ஸ்பூன்


 

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கிய பின் நன்றாக மசிக்கவும்.
ப்ரெட் துண்டுகள் ஒவ்வொன்றையும் தண்ணீரில் நனைத்து, ரொம்ப ஊறவிடாமல் உடனே எடுத்து, இறுகப்பிழிந்து உருளைக்கிழங்கோடு சேர்க்கவும்.
பச்சை மிளகாய், மல்லிக்கீரை, புதினாவை பொடியாக நறுக்கி அத்துடன் சேர்த்து, எண்ணெய் தவிர மீதியுள்ள அனைத்து பொருட்களையும் அத்துடன் சேர்த்து கலக்கி, சிறிய உருண்டைகளாக்கி நீள் உருளை வடிவில் உருட்டவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
மிளகாய் சாஸ் அல்லது கெட்சப்புடன் இதை சாப்பிட சுவையாக இருக்கும். இது திடீர் விருந்தாளிக்கேற்றது.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் அஸ்மா நலமாக இருக்கீங்களா. உங்க உருளைகிழங்கு கபாப் ரெம்ப டேஸ்டியாக இருந்தது,கத்தரிக்காய் ச‌ம்பலும் நல்ல டேஸ்ட். நன்றி.