தேதி: June 27, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மட்டன் - அரைக் கிலோ
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தயிர் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
எள் - 2 தேக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 2
நட்சத்திர மொக்கு - ஒன்று
முந்திரி - 6
வெங்காயம் - 2 + 1
தக்காளி - ஒன்று + 2
காய்ந்த மிளகாய் - 8
பூண்டு - 10
இஞ்சி - சிறுத் துண்டு
முருங்கைக்காய் - ஒன்று
உருளை - ஒன்று
மட்டனுடன் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு வேக வைக்கவும்.

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், எள், பட்டை, கிராம்பு, நட்சத்திர மொக்கு, முந்திரி, சேர்த்து வதக்கவும்.

அதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். இதை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் ஒரு வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் தக்காளியுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய மசாலா கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.

பின்னர் 2 தக்காளியை விழுதாக அரைத்து சேர்க்கவும்.

அதனுடன் வேக வைத்த மட்டனை சேர்க்கவும்.

பின்னர் ஒரு முருங்கைக்காய் அல்லது ஒரு உருளையை அதனுடன் நறுக்கி சேர்க்கவும்.

மட்டன் வேக வைத்த தண்ணீர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்த பின்னர் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். விருப்பப்பட்டால் தேங்காய் அரைத்தும் சேர்க்கலாம். சுவையான மட்டன் கிரேவி தயார்.

Comments
bala
Vidhiyasamana combo.. romba nallaa irukkunga :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பாலா
சூப்பரா இருக்கு. நாளைக்கு ஆப்பம்க்கு டிரை பண்ணி பார்க்கிறேன்.
Be simple be sample
பாலா
சூப்பர் பாலா பார்க்கவே நாவூறுது :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
நன்றி அட்மின்
எனக்கு உதவி, குறிப்பை ஏற்றாற்போல் மாற்றி அமைத்து அழகாக வெளியிட்ட டீமிற்கு மிக்க நன்றி
எல்லாம் சில காலம்.....
வனி அக்கா
தேங்க்ஸ் அக்கா. டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும் செய்து பாருங்க.
எல்லாம் சில காலம்.....
ரேவ்'ஸ்
ஆப்பத்துக்கு செய்தீங்களா? எப்படி இருந்தது?
எல்லாம் சில காலம்.....
ஸ்வர்ணா
நன்றி ஸ்வர்ணா
எல்லாம் சில காலம்.....
மட்டன் குழம்பு
முருங்கை சேர்த்த மட்டன் குழம்பு என் கணவருக்குப் பிடிக்கும். நான் இதுவரை எள் சேர்த்து செய்ததில்லை பாலா. நல்லா செய்து காட்டியிருக்கீங்க.
வாணி
நன்றி வாணி. எள் உடம்புக்கு மிக்க நல்லது. கால்சியம் இரும்பு சத்து நிறைந்தது. நம் உணவில் இதை சேர்த்துக்கொள்வது மிக்க நல்லது. இதை ட்ரை பண்ணி பாருங்க.
எல்லாம் சில காலம்.....