
நம் அனைவருக்கும் வெள்ளை நிறத்தின் மேல் அலாதி பிரியம். நான் வெள்ளையாக மாற வேண்டும் என்று யாருக்கு தான் ஆசை இருக்காது? இன்று ஃபேர்னெஸ் கிரீம் யூஸ் பண்ணாத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி ஒரு ஆசை வெள்ளை நிறத்தின் மீது. அப்படி என்ன தான் இருக்கிறது இந்த வெள்ளை நிறத்தின் மீது? நம் உடலில் மெலனின் குறைந்தால் நம் தோல் வெள்ளையாக மாறும். மெலனின் குறைபாட்டால் பல் நோய்களும் வரலாம். நாம் கறுப்பாக இருக்க வரம் செய்து இருக்க வேண்டும் ஆனால் நாம் யாரும் அதை விரும்புவதில்லை. ஆப்பிரிக்கர்களுக்கு பல நோய்கள் வருவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு மெலனின் உடலில் அதிகம். நம் தோல் வெள்ளையாக மாற வேண்டும் என்று விரும்பும் நாம் நம் தலை முடி வெள்ளையாக விரும்புவதில்லை. முடி கருப்பாக பல வித ஹேர் டைகளை வாங்கி அடிக்கிறோம். ஏன் இந்த முரண்பாடு?
நம் நாடு 1947 வரை வெள்ளையர்களின் பிடியில் மாட்டி தவித்தது. இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் நம் நாக்கு இப்போது 3 வெள்ளையர்களின் சுவையில் மாட்டிக் கொண்டுள்ளது. அதை பற்றி இங்கு பார்ப்போம்.
நாம் மூன்று வெள்ளையர்களை தவிர்த்தால் நலமுடன் வாழலாம். அந்த மூன்று வெள்ளையர் யாரென்று தெரிந்து கொள்ள ஆவலா இருக்கீங்கனு தெரியுது. அந்த மூணு பேர்
1. சர்க்கரை
2. மைதா
3. உப்பு
இதில் சர்க்கரையும் மைதாவும் அறவே ஒழிக்க வேண்டியவை. உப்பு குறைக்க வேண்டியது. முதலில் சர்க்கரை பற்றி பார்ப்போம்.
1. சர்க்கரை:
இதை பற்றி இப்போ தான் நிகி அழகான வலைபதிவு தெளிவாக விளக்கி உள்ளார். எனினும் சிறிய முன்னோட்டம். கரும்பு சாறை முதலில் வெல்லமாக வார்க்கிறார்கள். அதை சர்க்கரையாக மாற்ற பல கெமிக்கல்கள் கலக்கின்றனர். அதிலும் வெண்மை நிறத்திற்காக இன்னும் பல. இந்த வெண்மையை பார்த்து தான் நம்மில் பலர் ஏமாறுகிறோம். ஒரு நாளைக்கு 2 ஸ்பூன் சர்க்கரை எடுத்துக்கொண்டால் கூட மாதத்திற்கு அரை கிலோ சர்க்கரை நாம் உண்கிறோம். அப்படியானால் வருடத்திற்கு 6 கிலோ. இதில் பாதி வேதி பொருட்களே. அப்படியானால் 3 கிலோ தேவையற்ற வேதி பொருளை நாம் உண்கிறோம். முடிந்த வரை சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை உபயோகிப்போம். பாகு காய்ச்சி உபயோக படுத்த சிரம பட வேண்டாம். நாம் எடுக்கும் சிறு சிரமம் நம் உடலுக்கு மிக்க பயன் தருகிறது. எனவே சர்கரை நாம் தவிர்க்க வேண்டிய முக்கியமான பொருள்.

அடுத்து நம் லிஸ்டில் உள்ளவர் மைதா.
2. மைதா:
கோதுமையில் இரண்டு பகுதி உள்ளது. வெளிபுற சாப்பிட கூடிய பகுதி. மற்றும் உட்புற சாப்பிட கூடாத பகுதி. இந்த உட்பகுதியில் சத்து என்பது துளி கூட இல்லை. இந்த உட்பகுதியை நன்கு மைய அரைத்து வெண்மை நிறத்திற்கு பென்சோயிக் பெராக்சைடு வேதி பொருட்கள் சேர்த்து வழவழப்புக்கு, டேஸ்டிற்காக, softness காக அலாக்சன் மற்றும் சில வேதி பொருட்கள் கலந்து மைதா தயாரிக்கபடுகிறது. இதில் துளி கூட சத்து இல்லை. சுவைக்காக மட்டுமே. ஆனால் உடலுக்கு மிக்க கெடுதி. இந்த அலாக்சன் எலி மருந்தில் உபயோகிக்கும் பொருள். பென்சோயிக் பெராக்சைடு துணி வெளுப்பிற்காக பயன் படுத்தப்படும் பொருள். இதை தண்ணீரில் கைகளால் கரைத்தால் சோப்பு போல் நுரை பொங்கி கை அரிப்பதை பார்க்கலாம். இந்த மைதா உண்பதால் சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் எளிதில் வர வாய்ப்பு உள்ளது. இந்த மைதா எதற்கு? இதற்கு பதிலாக கோதுமை மாவை நாம் உபயோகிக்கலாமே. கடையில் வாங்கும் பேக்கரி ஐட்டங்களில் தான் அதிக மைதா உபயோக படுத்துகின்றனர். இதை தவிர்த்து வீட்டிலேயே கோதுமையில் தயாரிக்கலாம். ப்ரெட் கூட கோதுமை ப்ரெட் வாங்கலாம்.

அடுத்தவர் உப்பு.
3. உப்பு:
இதை நாம் முற்றிலும் ஒழிக்க தேவையில்லை. ஆனால் குறைக்க வேண்டும். உடலில் உப்பு அதிகமானால் டென்ஷன், இரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனை வரும். செரிக்கும் போது உடலுக்கு தேவையான உப்பை எடுத்துக்கொண்டு மீதி உப்பை சிறுநீரகத்திற்கு அனுப்பி விடும். அது சிறுநீரகத்தில் சிறிது சிறிதாக படிய ஆரம்பித்து கிட்னி ஸ்டோனாக மாறிவிடும். இது விரைவில் கிட்னி ஃபெயிலியருக்கு வழி வகுக்கும். அதற்காக உப்பை ஒரேயடியாக குறைத்தால் உப்பு பற்றாகுறை ஏற்பட்டு அதிலும் ப்ரச்சனை வரும். எனவே உப்பை குறைத்து அளவோடு உபயோகிப்போம்.
ஒரு மகான் இந்த மூன்று வெள்ளையர்களை ஒழித்தால் நலமுடன் வாழலாம் என்று கூறியுள்ளார். இவை அந்த மகான் கூறிய தவிர்க்க கூடிய தவிர்க்க வேண்டிய முக்கியமான மூன்று வெள்ளையர்கள். இந்த வெள்ளையர்களை முடிந்த வரை நாம் சேர்த்துக்கொள்ளாமல் வெளியேற்றுவோம். இதை தவிர்த்து இன்னும் சில அடுத்த பதிவில். உங்களுக்கு தெரிந்ததும் பகிரலாமே.
Comments
பால நாயகி
ஹாய்,
''வெள்ளையனே வெளியேறு''அருமையான, பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி.
கடல் அளவு ஆசை
கையளவு மனசு
ரஜினி
நன்றி ரஜினி. பாகம் 2 விரைவில் வரும். படிக்க தவறாதீர்கள்.
எல்லாம் சில காலம்.....
அன்பு பாலா
தலைப்பை பார்த்ததும் வரலாற்றுப் பதிவுன்னு நினைச்சேன்:)
மைதாவுக்குப் பதிலா கோதுமை மாவு உபயோகிக்கலாம்.
இந்த வெள்ளை லிஸ்டில் இப்போ பசும்பாலும் சேர்த்துக்கறாங்க.
நல்ல பதிவு பாலா.
நிகி
நன்றி நிகி. அந்த வெள்ளை லிஸ்ட் இன்னும் தொடரும் அடுத்த பதிவில். இதில் பால் மட்டும் இல்ல அரிசியும் கூட அடக்கம் நிகி.
எல்லாம் சில காலம்.....