தேதி: June 30, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கேரட் - கால் கிலோ
நெய் - 3 தேக்கரண்டி
வெல்லம் - 150 கிராம்
முந்திரி - தேவையான அளவு
திராட்சை - தேவையான அளவு
கேரட்டைத் தோல் சீவி ஆவியில் வேக வைக்கவும். வெந்ததும் மிக்ஸியில் போட்டு மசித்துக் கொள்ளவும். வெல்லத்தைத் துருவி வைக்கவும்.

வாணலியில் நெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள கேரட்டைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

அடிப்பிடிப்பது போல் இருந்தால் இடையிடையே நெய் சேர்க்கவும்.

வேக வைத்த கேரட் என்பதால் மீண்டும் நீண்ட நேரம் வேக வைக்கத் தேவையில்லை. சற்று சுருள வந்ததும் துருவிய வெல்லம் சேர்த்துக் கிளறவும். (நான் இயற்கை வெல்லம் சேர்த்துள்ளேன். சாதாரண வெல்லமாக இருந்தால் பாகு காய்ச்சி சேர்க்கலாம்.)

பிறகு நெய்யில் முந்திரி திராட்சையை வறுத்தெடுத்து ஹல்வாவுடன் சேர்த்துக் கிளறவும்.

சுவையான சத்தான கேரட் ஹல்வா தயார்.

Comments
இயர்கை வெல்லம் என்டரல் என்ன ?
இயற்கை வெல்லம் என்ரால் என்ன ?
நன்றி டீம்
குறிப்பை அழகாக வெளியிட்ட டீமிற்கு நன்றிகள் பல.
எல்லாம் சில காலம்.....
ப்ரியா
இயற்கை வெல்லம்னா ரசாயன கலப்பற்ற வெல்லம். இது எந்த வித கலப்படமும் இல்லாதது. கடைகளில் கிடைக்கிறது. இது கிடைக்காவிட்டால் சாதாரண வெல்லமும் சேர்க்கலாம். ஆனால் அதில் தூசு இருப்பதால் பாகு காய்ச்சி வடிகட்டி சேர்க்க வேண்டும்.
எல்லாம் சில காலம்.....
பாலா
நல்ல ஹெல்தியா செய்துருக்கிங்க. பாலா சூப்பர்.
Be simple be sample
ரேவ்'ஸ்
நன்றி ரேவ்'ஸ் ஆனா எப்டி பாத்தாலும் நீங்க தான் கேரட் ஹல்வா ஸ்பெஷலிஸ்ட்.
எல்லாம் சில காலம்.....