பயறு குருமா

தேதி: July 2, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

மொச்சை (அ) தட்டைபயறு (அ) கொண்டைக்கடலை - ஒரு கப்
கேரட், பீன்ஸ், உருளை - மூன்றும் சேர்த்து கால் கிலோ
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - அரை தேக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
வெங்காயம் - ஒன்று
கத்தரிக்காய் - 2
முருங்கைக்காய் - ஒன்று
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - சிறுத் துண்டு
பூண்டு - 10 பல்
பச்சைமிளகாய் - 2
அரைக்க :
தேங்காய் - கால் மூடி
பொட்டுக்கடலை - ஒரு கைப்பிடி
முந்திரி - 6


 

பயறை 2 மணி நேரம் நன்கு ஊற‌ வைத்து அதனுடன் கேரட், பீன்ஸ், உருளை மூன்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து குக்கரில் நன்கு வேக‌ வைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்திருப்பவற்றை விழுதாக அரைத்து வைக்கவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் விழுதாக அரைத்து சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் கத்தரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
காய்களுடன் நறுக்கிய‌ தக்காளி சேர்த்து தேவையான‌ அளவு தண்ணீர் ஊற்றவும்.
அதன் பிறகு மிளகாய்த் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க‌ விடவும்.
காய் வெந்ததும் வேக‌ வைத்த பயறு கலவையை சேர்க்கவும்.
இதனுடன் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்து சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் இறக்கி கொத்தமல்லித் தழை தூவி பரிமாற‌வும். சாதம் மற்றும் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள‌ சிறந்த‌ குருமா இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை திருத்தம் செய்து அழகாக‌ வெளியிட்ட‌ டீமிற்கு மிக்க‌ நன்றி.

எல்லாம் சில‌ காலம்.....