Dysentery

Hi friends,
aennoda paiyanukku 3 1/4 years aguthu, Sunday nattu kozhi kulambhu sapida koduthen 3 pease sapitan.Marunaalla erunthu avlava saptala, idly sappadu aethu koduthalum vamit panramathiri panran, kalaila aethu sapida koduththalum konja neraththula dish entry aiduthu, 1 nalaikku 1 timetha aguthu, athu kalaila mattumtha aguthu, kalaila aenthuruchchathume motion poiduvan, saptathume dishentry aiduthu,kozhi saptathu oththukkam aguthonu douta erukku, ethukku na aenna panrathu,motion aethu saptalum yellow colourla poran, therunjavanga konja sollunga pls..... entha 5daysa sariya sapida matran.

கோழி தொடர்பான கேள்வி. எனக்கு சொல்லத் தெரியல. நீங்க தலைப்பை சரி செய்தால் (Dish entry இல்லை அது - dysentery) கேள்வி பதில் தெரிந்த யார் கண்ணிலாவது படும் சகோதரி. மாற்றிவிடுகிறீர்களா?

‍- இமா க்றிஸ்

அன்புள்ள‌ பாரதி,
முதல் நாள் செய்த‌ கோழி உணவு எதுவாக‌ இருந்தாலும்
அது மறு நாள் விசமாகி விடும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நாங்கள் சுத்த‌
சைவம், அதனால் இது பற்றித்தெரியாது.
ஓமத்தை நன்கு புகையும் படிக் கருகவறுத்துப் பொடி
செய்து வைத்துக் கொள்ளுங்கள், அதை மூன்று சிட்டிகை அளவு தேனில்
குழைத்து குழந்தையை நக்கி விழுங்க‌ வையுங்கள். ஒரு நாளைக்கு மூன்று
அல்லது நான்கு வேளை இப்படிக் கொடுங்கள், சாப்பாட்டிற்கு முன்னோ பின்னோ
எப்படி வேண்டுமானாலும் கொடுங்கள். ரெகுலராக‌ மலம் கழிக்கும் வரை தரலாம்
வயிற்றுக் கோளாறுகள் எல்லாவற்றையும் தீர்க்கவல்லது ஓமம். பிறகு வாரத்தில்
இரண்டு நாள்களாவது வெறும் ஓமத்தினை வென்னீரில் போட்டு நன்கு கொதித்த‌
பின் அந்த‌ தண்ணீரையே குடி தண்ணீராக‌ குடிக்கவையுங்கள். இது எல்லோருக்குமே நல்லது. செய்து பார்த்துப் பதில் பதிவிடுங்கள்.
அதுவரையில் புழுங்கல் அரிசி கஞ்சி இட்லி கொடுங்கள். வயிற்றில் கைவைத்துப்பாருங்கள் இரைச்சல் இருந்தால் குழந்தை எதையும் சாப்ப்பிடாது
பிடிக்காது தோணாது, அதனால் திட்டாதீர்கள். உப்பு+ சர்க்கரைத் தண்ணீர்
குடிக்கவைக்க‌ மறக்காதீர்கள். சர்க்கரைக்குப் பதில் தேன் கொடுங்கள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Anbulla ammavukku,
Neenga sonnabadi ommathai thenla kalakki kodukkurenma, kalaila erunthu salt+sugar thannitha koduththen, konja paravala sapidarangama omaththaiyum koduththu parkirenma, annaikku samaththa kozhithan koduththen, romba nanrima.....

"Don't worry be happy"

வாந்தி வருவது போல் இருக்கு என்பதை கேட்டால் அஜீரணம் போல‌ இருக்கு. அப்படி இருந்தா ஓமம் நிச்சயம் உதவும். வயிற்றில் வலி இருக்கா கேளுங்க‌... இருந்தா சூடா இருக்கலாம். Black tea போட்டு அதில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து 2 தேக்கரண்டி அளவு கொடுங்க‌. சூடும் அதனால் ஏற்படும் வயிற்றுப்போக்கும் நிக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் குழந்தைக்கு அந்தக் காரம் மசாலா தொடர்பான‌ பொருள்கள் ஒத்துக்
கொள்ளாமல் இருந்திருக்கலாம். நாம் சாப்பிடுகின்ற‌ அளவு காரம் குறிப்பிட்ட நேரம் கொதிக்காவிட்டால் மிளகாயின் பச்சைக்கார‌ நெடி அட்ங்காது, இவையும் காரணமாக‌ இருக்கலாம். எது எப்படி ஆனாலும் குழ்ந்தையின் வயிறு இப்போதைக்கு ரணமாகினதாலேயே சீதபேதி ஆகி உள்ளது, அதனால்
இடியாப்பம் தேங்காய்ப்பால்/ இட்லி தேங்காய்ப்பால், நெய்+சர்க்கரை/
மணத்தக்காளிக்கீரை/ அரைஅடி உய்ரமே உள்ள‌ முளைக்கீரை/ பசலைக்கீரை/ பொன்னாங்கண்ணிக் கீரை,/ அரைக்கீரை,/பருப்புக்கீரை சில‌ இடங்களில் இதை கோழிக்கீரை என்பார்கள்,சிறுகீரை இவற்றை பாசிப்பருப்புடன் தக்காளி, பூண்டு, சின்னவெங்காயம் போட்டு நன்கு வெந்தபின் கடைந்து முதல் இரண்டு நாளுக்கு
தண்ணீரை மட்டும் சூப் போல‌ வறுத்த‌ மிளகுத்தூள் மட்டும் +உப்பு சேர்த்து
குடிக்கவையுங்கள். பிறகு கீரையைத் தரலாம். வேகவைத்த‌ உருளை,
சர்க்கரை வள்ளிக் கிழங்கு, ஆள்வள்ளிக்கிழங்கு என்கிற‌ குச்சிக்கிழங்கு இவ்ற்றை
நன்கு வேக‌ வைத்து புளிக்காத‌ தயிரில் உதிர்த்துவிட்டு உப்பு, தேங்காய்த்துருவல்
சேர்த்து சாப்பிடக்கொடுங்கள், வயிறும் நிறையும், புண்ணும் ஆறும்.
பிறகு வெந்தய‌ இட்லி சாப்பிடக் கொடுங்கள் ( லேசான கசப்பு உளுந்து இல்லாமல் வெந்தயம் மட்டுமே போட்டால் இருக்கும் அரிசி+வெந்தயம் 8+1
எட்டு பங்கு அரிசிக்கு ஒருபங்கு வெந்தயம் கணக்கு)
எக்காரணம் கொண்டும் நன்கு அரைபடாத‌ மிளகாயையும் நன்கு வேகாத‌
பாக்கெட் மசாலா தூளையும் பயன் படுத்தாதீர்கள், உங்கள் குழந்தைக்கு
அவை ஒத்துப்போகவில்லை. நாட்டு மருத்துவம்> தென்னையின் பயன்கள்>
தலைப்பில் வெளியான‌ தகவலை யூ டியுப்பில் பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

vayiru soodatha erunthathu, athukku lemon tea koduththen,nethu eveningla erunthu omma water kodukka arambichiten, aanaa sapadutha sariya sappidarathillai.unga adviceku rombha nanri Vani........

"Don't worry be happy"

Neenga sonnathaiyellam kandippa follow panrenma, nattu maruththuvam you tubela parthom usefulla erunthathu, eppo konjam paravala sapidarathuthan illai.... aennoda kelvikku pathivittatharku romba thanksma.....

"Don't worry be happy"

மேலும் சில பதிவுகள்