வணக்கம் தோழிகளே!!!
எனது மகளுக்கு 4வது பிறந்தநாள் வரவிருகிறது. அவளுக்கு ஒரு நல்ல பரிசளிக்க விரும்புகிறேன். அவளுக்கு உபயோகமாக இருக்கவேண்டும் என்று எண்ணுகிரேன் என்ன கொடுக்கலாம் சொல்லுங்கள்.
வணக்கம் தோழிகளே!!!
எனது மகளுக்கு 4வது பிறந்தநாள் வரவிருகிறது. அவளுக்கு ஒரு நல்ல பரிசளிக்க விரும்புகிறேன். அவளுக்கு உபயோகமாக இருக்கவேண்டும் என்று எண்ணுகிரேன் என்ன கொடுக்கலாம் சொல்லுங்கள்.
Manju sundar
Study based ah avangaluku ethu ishtam nu select pani kodunga
toysna building blocks vanki
toysna building blocks vanki tharalam .. athai vaithu kaalam odividum ...
உபயோகம் vs சந்தோஷம்
//அவளுக்கு உபயோகமாக இருக்கவேண்டும்// 'குழந்தைக்கு உபயோகம்' - என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்பது சரியாகப் புரியவில்லை. இந்த வயதில் குழந்தைக்கு எதையும் 'உபயோகிக்கத்' தெரியாது.
சில விளையாட்டுப் பொருட்கள் சிந்தனை வளர்ச்சியை அதிகரிக்கும்; கற்பனையைத் தூண்டிவிடும். பயன்பாடு பார்த்து வாங்கிக் கொடுப்பீர்களானால்.... மறைமுகமாக உங்கள் திருப்தி, பணத்தை உபயோகமாகச் செலவளிப்பது என்று... 'உங்கள் நன்மைகள்' தான் கவனிக்கப்பட்டிருக்கும். அவை எப்படி 'குழந்தைக்கான' அன்பளிப்புகள் ஆகும்!!
அவற்றை நீங்கள் வேறு சமயம் வாங்கிக் கொடுக்கலாம். இது குழந்தையின் பிறந்தநாள். குழந்தைக்குச் சந்தோஷம் கொடுப்பவை எவை என்பது இதுவரை அவதானித்ததில் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த ஒருநாள் மட்டும் பயன்பாடு எல்லாம் பார்க்காமல் சந்தோஷத்தை மட்டும் கொடுக்கலாமே!
உங்கள் சின்ன வயது வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். எவை உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்திருக்கின்றன? ஸ்கூல் பாக் & ஸ்டேஷனரி, பொம்மை, விளையாட்டுப் பொருட்கள் - இரண்டில் எந்த வகை!!
குழந்தைக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுங்கள். பேச்சுவாக்கில் அவரிடமே கேட்டுப் பாருங்கள். அவருக்குத் தெரியாமல் வாங்கிப் பொதி செய்து வைத்துவிடுங்கள். சந்தோஷப்படுவார். இனி வரும் காலங்களில் அவர் சந்தோஷம் - படிப்பு ++ என்று மெதுவே குறையப் போகிறது. இப்போதாவது சந்தோஷமாக விளையாடட்டுமே!
உங்கள் பட்ஜெட்டில் மீதி இருந்தால் உங்கள் திருப்திக்கு, உபயோகமானது ஒன்று வாங்கிக் கொடுக்கலாம்.
~~~~
'வணக்கம் தோழிகளே' என்று இருப்பதைப் பிறந்தநாட் பரிசு என்று மாற்றிவிடுங்கள். பொதுவான தலைப்புகள் பலரை ஈர்ப்பது இல்லை. உங்கள் கேள்வியைச் சிலர்தான் படித்திருப்பார்கள் சகோதரி.
- இமா க்றிஸ்
நன்றி, இம்மாம்மா
நன்றி,
இம்மாம்மா தெளிவுகிடைத்தது.நன்றி vanisri,sara