முதல் பிறந்தநாள்....

முதல் பிறந்தநாள்....என் செல்ல மகளுக்கு இந்த மாதம் பிறந்தநாள்..அதற்கு உங்களது ஆசிர்வாதமும்,உதவியும் தேவை..நாங்கள் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடவேண்டும் என்று நினைக்கின்றோம்...அதற்கு உங்கள் உதவி தேவை..மதுரையில் குழந்தைகளுக்கான டிரஸ் எங்கு வாங்கலாம்?நான் இதுவரை மதுரையில் என் பொண்ணுக்கு டிரஸ் எடுத்தது இல்லை இதுவே முதல் முறை...மிகவும் அழகாக வாங்கவேண்டும் எங்கு வாங்கலாம் ப்ளீஸ் சொல்லுங்கள்...அதேபோல் இரவு பார்ட்டிக்கு என்ன டிபன் வைக்கலாம் மெனு சொல்லுங்கள் சைவம் தான்...ப்ளீஸ்..நன்றி...

உங்கள் குழந்தைக்கு எங்களது நல்ஆசீர்வாதம் உரித்தாகுக.. :-)

//மதுரையில் குழந்தைகளுக்கான டிரஸ் எங்கு வாங்கலாம்?//

அதை யாராவது மதுரகாரய்ங்க வந்து சொல்வாய்ங்க... :-)

//இரவு பார்ட்டிக்கு என்ன டிபன் வைக்கலாம் மெனு..//

இதுக்கு மட்டும் நான் பதில் சொல்றேன். அடிக்கடி எதாவது பங்சன் வைக்கிறதால இதுக்குன்னு ஒரு ஸ்டாண்டர்ட் செக்லிஸ்ட் வச்சிருக்கேன். அது உங்களுக்கு உதவலாம். இது வெறும் மாதிரிதான். இதில உங்களுக்கு பிடிச்சதை எடுத்துக்கோங்க.

மெனுவுக்கு முன்னாடி, வரவேற்பில இருந்து ஒரு பார்ட்டிக்கு என்ன செஞ்சா நல்லா இருக்கும்னு சொல்றேன்.

வாசல் வரவேற்பிற்கு சந்தனமும் சாக்லேட்டும் இருக்கணும். தயவுசெஞ்சு சீனியோ, கல்கண்டோ தட்டுல வைக்காதீங்க. அதுக்கு சந்தனம் அபிஷேகம் பண்ணிட்டு போயிடுவாங்க. அதை யாரும் எடுத்து சாப்பிடுறதுகூட கிடையாது. அதனால சாக்லேட் பெஸ்ட் சாய்ஸ். பர்த்டே பார்ட்டிங்கிறதால குழந்தைகள் அதிகம் வருவாங்க. அடுத்து, பெண்களுக்கு ரோஜா பூக்கள் ஒரு தட்டுல இருக்கணும். மறக்காம ஹேர்பின்னும் அட்டையோட அதில வச்சிருங்க. சின்னச் சின்ன பட்டர் ரோஸ் இருந்தா போதும்.

(தேவையானவை - சந்தனம், சந்தனப் பேழை, சாக்லேட், ரோஸ், ஹேர் பின், வைப்பதற்கு தட்டுகள், மேசை, மேசை விரிப்பு, வரவேற்பில் நிற்பதற்கு ஒரு நபர் அல்லது இருவர்)

உள்ளே வந்து உட்கார்ந்ததும் வெல்கம் ட்ரிங்க்ஸ். என்னோட சாய்ஸ் ரோஸ் மில்க் அல்லது பாதாம் மில்க். ஒரு 100 அல்லது 150 மில்லி கப்ல கொடுக்கணும். அதிகமா கொடுக்கக்கூடாது. இதுக்கு வாய்ப்பில்லாத பட்சத்தில பாட்டில் ட்ரிங்க்ஸ் கொடுக்கலாம். கோக், பெப்சின்னு இல்லாம, மிரண்டா ஃபாண்டா ன்னு கொடுத்தா ஓரளவு எல்லாரும் விரும்பி குடிப்பாங்க. அதுவும் வேண்டாம்னு நினைச்சா லெமன் ஜூஸ் கொடுக்கலாம். தயவுசெஞ்சு காஃபி, டீ கொடுத்துடாதீங்க. :-)

(தேவையானவை - பேப்பர் கப், குளிர் பானம், குளிர் பானம் கொடுப்பதற்கு ஒரு நபர், குடித்தப்பிறகு கப்பை போடுவதற்கு வசதியாக குப்பைப் பெட்டி - ஒரு பெரிய அட்டைப் பெட்டியை தயாராக வைத்துக்கொள்ளவும்.)

வந்திருக்கும் குழந்தைகளுக்கு பர்த்டே கேப், ஃபோம் ஸ்ப்ரே, பலூன் இத்யாதிகள் கொடுப்பது உங்கள் விருப்பம்.

கேக் என்ன மாதிரி கேக், எவ்வளவு பெரியது ங்கிறதை முடிவு செஞ்சுக்கோங்க. விருந்தினர்களுக்கு எல்லாம் பாப்பா வெட்டும் பர்த்டே கேக்கையே வெட்டிக் கொடுக்கப் போறீங்களாங்கிறதை முன்னாடியே முடிவு பண்ணிக்கோங்க. அப்படி இருக்கும்பட்சத்தில வருகையாளர்கள் எத்தனைப் பேர் ங்கிறதை முடிவு செஞ்சு அதுக்கு தகுந்த மாதிரி கேக் ஆர்டர் கொடுக்கணும். ஒரு சில டிசைன் கேக் செய்யணும்னா குறைந்தபட்சம் இத்தனை கிலோவில் செய்தால்தான் முடியும் ன்னு சொல்வாங்க. அதனால அதை முன்னாடியே முடிவு பண்ணிக்கோங்க. வருகையாளர்கள் அதிகம் இருந்து கேக் அளவு சின்னதா இருந்தா, வந்திருக்கிறவங்களுக்கு கொடுக்க தனியாக சின்ன கேக்குகள் வாங்கி வச்சுக்கோங்க. சின்னவங்களுக்கு எல்லாம் பாப்பா வெட்டும் கேக்கில் கொஞ்சம் கொடுத்துட்டு பெரியவங்களுக்கு தனியா வாங்கி வச்சிருக்கிற கேக் கொடுக்கலாம். ஒரு நூறு பேர் வருகின்றார்கள் என்றால், ஒருவருக்கு குறைந்த பட்சம் 50 கிராம் என்று வைத்தால்கூட 5 கிலோவிற்கு கேக் செய்ய வேண்டும். இதில பற்றாக்குறை வந்திராம பார்த்துக்கோங்க.

கேக் கொடுக்கும்போது அதுக்கு துணையா மிக்ஸ்ரை காரமாக வைக்கிறதை தவிர்த்துடுங்க. மிக்ஸரை எல்லோரும் விரும்பி சாப்பிடுறதில்லை. நிறைய பேர் வச்சிடுவாங்க. எடுத்து சாப்பிடுறதுலயும் சிரமங்கள் இருக்கு. சின்னப்பிள்ளைங்க கொட்டித் தீர்த்துடுவாங்க. அதுக்கு மாற்றாக மினி பப்ஸ் அல்லது மினி கட்லெட் கொடுக்கலாம். பட்ஜெட் பிரச்சனை என்றால் மிக்ஸருக்கு பதிலாக கார்ன் ஃப்ளேக்ஸ் வறுவல் கொடுக்கலாம். மிக்ஸ்ரை கடைசி ஆப்சனா வைச்சுக்கோங்க. தண்ணீர் தேவைப்படுறவங்களுக்காக எப்பவும் தயாரா தண்ணீர் கப் தண்ணீரோட வச்சுக்கோங்க.

(தேவையானவை: கேக், காரம், பேப்பர் ப்ளேட், டிஷ்யூ - பேப்பர் ப்ளேட் கொடுக்கும்போது மறக்காமல் ஒரு டிஷ்யூ பேப்பரையும் சேர்த்து கொடுக்க வேண்டும். தண்ணீர், தண்ணீர் கப்)

கூடுதல் டிப்ஸ்: கேக் வெட்டும்போது ரெக்கார்ட் ப்ளேயர் அல்லது கம்ப்யூட்டரில் ஹேப்பி பர்த்டே சாங்க் பாடுமாறு செய்துடுங்க. இப்போதெல்லாம் வாயைத் திறந்து ஹேப்பி பர்த்டே சொல்வதற்கு கூச்சப்படுறாங்க. அப்புறம் ஒரு ஸ்டார்ட்டிங் ட்ரபுள் இருக்கும். மற்றவர்கள் பாடுவதற்கு வெயிட் பண்ணாம ப்ளேயரை போட்டுவிட்டுடலாம். எல்லாரும் கூடவே பாடுவாங்க. ரெக்கார்டட் வாய்ஸ் நல்லா இருக்குங்கிறதால இங்கே கர்ணக்கொடூரமா யாராவது பாடினாகூட அது தெரியாம போய்டும். குழந்தையும் பயப்படாது.

அடுத்த மிக முக்கியமான விசயம், கேக் வெட்டிய பிறகு அண்ணன், அக்கா, மாமா, அத்தை, பாட்டி, தாத்தா, உம்மா, உம்மம்மா ன்னு சொந்த பந்தங்கள் எல்லாம் வரிசையில நின்னு குழந்தைக்கு க்ரீமையோ, கேக்கையோ எடுத்து வாயில திணிச்சு அப்படியே தங்களோட அன்பை கொட்டித் தீர்க்க தயாரா வருவாங்க. குழந்தை பக்கத்துலேயே விடாதீங்க. அப்பா, அம்மா மட்டும் பேருக்கு கொஞ்சம் கேக்கை குழந்தை வாயில தேச்சி விட்டாப் போதும். வேற யாரையும், என்ன நெருங்கின சொந்தமா இருந்தாலும் கேக் ஊட்ட விடாதீங்க. கிஃப்ட்டை மட்டும் கொடுத்துட்டு நகர்ந்து போய்க்கிட்டே இருக்கணும்னு சொல்லிடுங்க.

சரி, இப்ப டிபன் மெனு.

டிஃபன் எப்படி கொடுக்கப் போறீங்கங்கிறதை முன்னாடியே முடிவு பண்ணிக்கோங்க. பஃபே சிஸ்டமா இல்ல பரிமாறுற சிஸ்டமான்னு. இது ரொம்ப முக்கியம். அதுக்கு ஏத்தமாதிரி அரேஞ்மெண்ட்ஸ், மெனு இருக்கணும். இன்னைய காலக்கட்டத்துக்கு பெஸ்ட் சாய்ஸ் பஃபே.

பஃபேன்னா யூஸ் அண்ட் த்ரோ ப்ளேட் வாங்கி வச்சிடுங்க. பாக்கு மட்டை தட்டு கிடைக்கும். பெரிய சைஸ் தட்டு 4 அல்லது 5 ரூபா வரும். அந்த தட்டு வாங்கினா அதில உள்ளே வாழை இலையை கட் பண்ணி நடுவில வைக்கணும். இதை மத்தியானமே செஞ்சு வச்சிடணும். இல்லேன்னா பாத்திரங்கள் வாடகைக்கு விடுற இடங்கள்ல தட்டுகள் வாடகைக்கு எடுத்து வரலாம். ஒருவேளை மற்ற உணவுகள் வைக்கிறதுக்கு பாத்திரங்கள் உங்களுக்கு தேவைப்பட்டா அங்கேயே எடுத்துக்கலாம். இல்ல, உணவு வெளியே ஆர்டர் பண்ணினா அவங்களையே கொண்டு வரச்சொல்லலாம்.

மெனு சாய்ஸ்

பர்ஸ்ட் வெஜிடபிள் சூப், விருந்தினர்கள் கேக் சாப்பிட்டுட்டு குழந்தைக்கு பரிசுப் பொருட்கள் கொடுக்கிற நேரத்துலயே இதை கொடுக்க ஆரம்பிச்சிடலாம்.

ஸ்வீட் ஏற்கனவே கேக் சாப்பிட்டு இருக்கிறதால மறுபடியும் கொடுக்காம அவாய்ட் பண்ணலாம்.

கோபி 65 அல்லது கோபி மஞ்சூரியன் ட்ரை
ஒரு சேமியா அல்லது சேர்வை அயிட்டம். இனிப்பு சேமியா பெஸ்ட் சாய்ஸ். செய்யறது ரொம்ப ஈசியும்கூட. லெமன் சேமியாவும் கொடுக்கலாம். குழந்தைகள் இனிப்பை விரும்புவாங்க.

ஒரு இட்லி ஐட்டம். அது மினி இட்லியா இருக்கலாம். பொடி இட்லி/சில்லி இட்லியா இருக்கலாம். இல்லேன்னா சாதா இட்லியா இருக்கலாம். குழந்தைகளுக்கு மட்டுமில்லாம எல்லாருக்குமே இது பெஸ்ட்.

சப்பாத்தி அல்லது நாண் ஐட்டம். அதுக்கு சைடு டிஷ் பட்டர் பனீர் மசாலா, சன்னா மசாலா, நவரத்தின குருமா இப்படி எதாவது ஒண்ணு. அப்படி இல்லைன்னா சில்லி பரோட்டா/ கைமா பரோட்டா மாதிரி ஏதாவது ஒண்ணு ஆனியன் ரைத்தாவோட கொடுக்கலாம்.

நூடுல்ஸ் நிலைமையே நொந்து நூடுல்ஸாகி போயிருக்கிறதால அதை தவிர்க்க வேண்டி இருக்கு. இல்லேன்னா நூடுல்ஸ் ஒரு நல்ல சாய்ஸ். இதுக்கு மாற்றா வெஜ் புலாவ் அல்லது பிரியாணி கொடுக்கலாம்.

கடைசியாக தயிர் சாதம். ஊறுகாய். அதுக்கு பிறகு ஐஸ்க்ரீம், குலோப்ஜாமூன், ஃப்ரூட் சாலட், பீடா, வாழைப்பழம் இதெல்லாம் உங்கள் சாய்ஸ்.

மெனு சொல்றதுல உள்ள பிரச்சனை என்னன்னா, நான் என்ன வேணும்னாலும் சொல்லிட்டுப் போயிடலாம். ஆனா அதை யாரு எப்படி செய்யப் போறாங்கங்கிறதுதான் அதில முக்கியமான விசயமே. வீட்டுல செய்யப் போறீங்களா, வெளியே ஆர்டர் கொடுக்கப் போறீங்களா, ஆர்டர் கொடுத்தா சரியா செய்வாங்களான்னு நிறைய கேள்விகள் இருக்கு. அதனால இங்க மேலே கொடுத்து இருக்கிறது ஒரு சராசரி மெனு. ஓரளவுக்கு எல்லா இடத்துலயும் இதை செஞ்சுடுவாங்க. அப்படி நல்லா செய்யறதுக்கு ஆட்கள் இருக்காங்க, நிறைய செய்யறதுக்கு பட்ஜெட்ம் இருக்குன்னு நினைச்சா கீழே கொடுத்து இருக்கிற லிஸ்ட்ல இருந்து எதை வேணும்னாலும் நீங்க சேர்த்துக்கலாம்.

பணியாரம்-சட்னி
இடியாப்பம்-குருமா/தேங்காய்பால்
அடை-அவியல்
பட்டூரா-சன்னா
சுடச்சுட கொடுக்க முடியும் என்றால் ஏதேனும் ஒரு தோசை அல்லது ஊத்தப்பம் வகை.

வெஜ் ஸ்ப்ரிங் ரோல்ஸ்
பனீர் 65
ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்
மினி ப்ரெட் பஜ்ஜி
கட்லெட்

இப்படி ஒரு பெரிய பட்டியல் போடலாம். அறுசுவை சிற்றுண்டி பிரிவில் சைவத்தில் தேடுனா ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறிப்புகள் இருக்கும். உங்களுக்கு நல்ல ஐடியா கிடைக்கும்.

http://www.arusuvai.com/tamil/recipes/25?type_1=All&tid=12

பார்ட்டி முடிஞ்சு செல்லும் குழந்தைகளுக்கு எதேனும் கிப்ட்ஸ் வைத்து அன்பளிப்பு பை கொடுக்கலாம். பெரியவர்களுக்கு தாம்பூல பை கொடுக்கலாம்.
கட்டி வைத்திருக்கும் பலூன்களை எல்லாம் கழட்டி, வந்திருக்கும் குழந்தைகள் கையில கொடுத்து அனுப்பிச்சிடுங்க. அவங்க சந்தோசமா எடுத்துக்கிட்டுப் போவாங்க. இல்லேன்னா எல்லாமே அடுத்த நாள் காத்து இறங்கி யாருக்குமே பயனில்லாம போயிடும்.

எங்க செக் லிஸ்ட் முதல் நாள் நைட்டு டெக்கரேசன் ஆரம்பிக்கிறதுல இருந்து பார்ட்டி முடிஞ்சு எல்லாத்தையும் கிளியர் பண்ணுற வரை என்னென்ன தேவை, என்னென்ன செய்யணும்னு இருக்கும். அது எல்லாருக்கும் பொருந்துற மாதிரி இருக்காது. எங்களுக்கான ஸ்பெசிபிக் லிஸ்ட் அது. :-) இங்க கொடுத்திருக்கிறது கொஞ்சம் ஜெனரிக்கான ஒரு சின்ன லிஸ்ட். உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கோங்க.

மறுபடியும் வாழ்த்துக்கள். :-)

மிக்க நன்றி அட்மின் அண்ணா....நீங்க சொன்ன எல்லாமே எனக்கு ரொம்ப உதவியா இருந்தது..வரவேற்ப்பு பத்தி நன்றாக தெரிந்துகொண்டேன்...மெனு ளையும் நெறையா ஐடியா கிடைத்திருகிறது..அனைத்துமே உங்கள் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன்..இதில் நான் எதிர்பாராத விஷயம் என்னவென்றால் நீங்களே பதில் சொன்னதுதான் அண்ணா..மிகுந்த மகிழ்ஷி..பிறந்தநாள் விழால இவ்ளோ விஷயம் இருக்குனு உங்க பதிவு மூலம்தான் தெரிந்துகொண்டேன்...நன்றி அண்ணா..என் பதிவில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்..தமிழ் தட்டச்சு தெரியாது..நன்றி..

மேலும் சில பதிவுகள்