கற்பப்பை இறக்கம்

கற்பப்பை இறக்கம் அப்படின்னா என்ன ப்ளீஸ் யாரவது தெரிந்தால் சொல்லுங்கள். எனக்கு யூரின் போற இடத்தில் கை வைத்து அழுத்தினால் எதோ தோல் மாதிரி தெரிகிறது. எனக்கு ரொம்ப பயமாக உள்ளது.....

//எனக்கு ரொம்ப பயமாக உள்ளது.// தினம் தினம் பயந்துட்டு இருக்காம போய்க் காட்டிரலாம்ல! :-) கிளம்புங்க.

உங்கள் அவதானத்தைச் சொல்கிறீர்கள். சொல்லும் விதத்தைப் பார்க்க... உங்களுக்கு உங்கள் உடலுறுப்புகள் பற்றிய தெளிவான அறிவு இருப்பதாகத் தெரியவில்லை. //யூரின் போற இடத்தில்// இதற்கும் கருப்பைக்கும் தொடர்பு இல்லை. அருகருகே இருந்தாலும் இரண்டும் வேறு வேறு பாதைகள்.

வேறு சிரமங்கள் எதுவும் இருப்பதாகச் சொல்லவில்லை நீங்கள். சொன்னாலும் கூட, 'இதுவாக இருக்கலாம்,' என்று நான் சொல்லலாமே தவிர சிகிச்சை என்று எதுவும் சொல்லப் போவது இல்லையல்லவா? நீங்கள் சந்தேகிப்பது சரியாக இருக்கலாம் அல்லது இது சிறுநீர்ப்பாதை அழற்சியாக இருக்கலாம். இரண்டுக்கும் சிகிச்சைகள் இருக்கின்றன.

பயப்படாமல், குழம்பாமல் மருத்துவரிடம் போய்க் காட்டுங்கள். அதை உடனே செய்யுங்கள். எதுவும் ஆரம்பத்தில் காட்டினால் குணமாக எடுக்கும் காலம் குறைவு. அதையே நாலு பிரச்சினை கூடிய பின்பு போய்க் காட்டினால் குணமாகவும் காலம் எடுக்கும். சரியாகிரும். யோசிக்காதீங்க.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா அம்மா. உண்மையாகவே எனக்கு அதை பற்றி ஒன்றும் தெரியாது. 2 நாளுக்கு முன் யூரின் போகும் போது அந்த இடத்தில் லைட்ட வலி வந்தது.அப்போது தான் எனக்கு தெரியும். ஆனால் எல்லோருக்கும் இப்படித்தான் இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. இப்போது வலி இல்லை. ஆனால் ஏதோ அந்த இடத்தில் இருப்பது போல உணர்வு.

இரண்டிற்கும் சிகிச்சைகள் இருப்பதாக சொன்னீங்களே. அது என்ன சிகிச்சை என்று சொல்ல முடியுமா. ப்ளீஸ்

:-) நான் டாக்டர் இல்லை. உங்களைப் பார்க்கவும் இல்லை. எதையாவது சொல்லி உங்களைப் பயமுறுத்துவதாகி விடக் கூடாது. ஏற்கனவே யோசனையில் இருக்கிறீர்கள். அதே சமயம், 'இது ஒன்றுமே இல்லை, இதைக் கண்டுகொள்ள வேண்டாம்,' என்றும் சொல்லவும் விரும்பவில்லை. நீங்கள் வித்தியாசமாக எதையோ உணர்ந்திருக்கிறீர்கள். அதனால் போய் ஆலோசனை பெறுவது அவசியம்.

//இரண்டிற்கும் சிகிச்சைகள் இருப்பதாக சொன்னீங்களே.// இப்போ எதற்குத்தான் சிகிச்சை இல்லை தோழி! சில வருடங்கள் முன்பு கருப்பை இல்லாமல் பிறந்த பாகிஸ்தானியருக்கு இந்தியாவில் கருப்பை உருவாக்கும் சிகிச்சை நடந்தது; வெற்றியும் கிட்டியது. சில வாரங்கள் முன்பு படித்த செய்தி... இறந்த ஒருவரது முகத்தைத் தானமாகப் பெற்று முகம் சிதைவடைந்திருந்த ஒருவருக்குச் சிகிச்சையளித்து வெற்றி பெற்றிருந்தார்கள். ஆண்களைப் பெண்களாக்கும் சிகிச்சை, பெண்களை ஆண்களாக்கும் சிகிச்சை... இப்படியெல்லாம் இருக்க.... 'எதற்கும் சிகிச்சை உண்டு,' என்று நான் சொன்னால் தவறில்லை அல்லவா? 'எல்லாவற்றுக்கும் சிகிச்சைகள் உண்டு. பயமில்லாமல் இருங்கள்,' என்ற கருத்தில் சொன்னது அது. :-)

நீங்க போய்க் காட்டுங்க. பிறகு விரும்பினால், டாக்டர் என்ன சொன்னாங்க என்கிறதை இங்கே பகிர்ந்துக்கங்க. வேறு யாருக்காவது உதவியாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

இமா அம்மா. நான் பயப்படுவதற்கு கராணம். எனக்கு ஒரு குழந்தை இருக்கிறாள். 2 வயது ஆக போகிறது. எனக்கு சிசெரியன் மூலமாகதான் அவள் பிறந்தாள். இந்த சிசெரியன் தாக்குதலில் இருந்தே என் மனம் இன்னும் மீழவில்லை. இதுவும் எதாவது ஆப்ரேஷன் அப்படி இப்படின்னு வந்துருமோன்னு பயமா இருக்கு..

இமா அம்மா ப்ளீஸ் பதில் சொல்லுங்கள்.

//சிசெரியன் தாக்குதலில் இருந்தே என் மனம் இன்னும் மீழவில்லை.// கர்ர்... தாக்குதலா! என்னதான் சொல்றீங்க!!! முதல்ல உங்க எண்ணத்தை மாத்திக்கங்க. நீங்க வேணாம் வேணாம்னு தடுக்க இல்லைன்னு புடிச்சுப் பண்ணாங்களா? அப்போ அது உங்க லக். சிசேரியனாலதான் இன்று பல குழந்தைகளும் அவர்களது தாய்மாரும் உயிரோட இருக்கிறாங்க.

சிசேரியனுக்குப் பின்னால் உங்களுக்குப் பெரிய காம்ப்ளிகேஷன்ஸ் ஏதாவது இருந்ததா? இருக்கிற மாதிரி தெரியல. வேதனை... அது இல்லாம இருக்குமா என்ன? நார்மல் டெலிவரிக்குக் கூடத்தான் வலி இருக்கு. தொடர்ந்து வரும் நாட்களில் பிரச்சினைகள் இருக்கு. அப்போ அதையும் தாக்குதல்னு தான் சொல்லணும் எல்லோரும். கால்ல முள் தைத்தாலே வலிக்குது. இதுக்கு இருக்காதா!

உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கு. அது மட்டும் போதுமா? இன்னொண்ணு வேணாமா? ஒரு குழந்தை தங்கினால், இந்த வலி ++க்கு எல்லாம் பயந்து வேண்டாம் என்பீங்களா?

பயந்துட்டு டாக்டர்ட்ட போகாம இருந்தா வலி சரியாகிருமா? தன்னால சரியாகலாம்தான். ஆகாம அதிகமாவும் முடியும். இன்ணொண்ணு - நீங்க சந்தேகிக்கிற மாதிரி கருப்பை இறக்கம்தான் என்றால் இப்படியே விட்டு குழந்தை தங்கிவிட்டால் சிரமமாக இருக்கலாம்.

சிசேரியன் அனுபவம் எனக்கும் இருக்கு. சிசேரியன் பண்ணாத அனுபவமும் இருக்கு. (இப்ப அடுத்த கேள்வியா என்னை இண்டர்வியூ பண்ற கேள்விகள் வரப்படாது. பதில் சொல்ல மாட்டேன்.) ;) சிசேரியனைத் தாக்குதல்னு சொல்ல முடியல என்னால. ;( என் குழந்தை நல்லா இருக்கிறதைப் பார்த்து இப்பவும் சந்தோஷப்படுறேன்.

பெருசா நினைச்சா எதுவும் பெருசுதான். என்னால முடியும், எதையும் ஃபேஸ் பண்ணுவேன் என்று நினைச்சுட்டா பெருசான விஷயமும் சமாளிக்கக் கூடியதா தெரியும். இமாவும் உங்களைப் போல ஆப்பரேஷனுக்குப் பயந்திருந்தேனானால் இப்போ நீங்க அடுக்கடுக்கா கேள்வி கேட்க இமா இருந்திருக்க மாட்டேன்.

ஒண்ணு புரியல எனக்கு. நீங்க சொன்ன விஷயம்... சரியா சொல்றீங்களா என்றே எனக்கு சந்தேகம் இருக்கு. உங்களுக்கு இருக்கிறது யூரின் ட்ராக் இன்ஃபெக்க்ஷனா இருக்கலாம். நான் சொன்னதை நீங்க கணக்குல எடுக்கல. :-) தேவையில்லாமல் எல்லாம் ஆபரேஷன் பண்ண மாட்டாங்க.

அப்படி இருந்தா டாப்லட் போதும். இதை நேத்தே சொல்லலயே என்று நீங்க நினைக்கலாம். இங்க பதில் சொல்றதுல சில சிரமங்கள் இருக்கு. கேள்வி கேட்கிறவங்களுக்கு எது தெரியுது, எது தெரியாது என்று எனக்குத் தெரியாது. ஒரு கெஸ்ஸிங்ல பதில் சொல்றேன். சிலருக்கு தமிழ்ல தட்டினால்தான் புரியுது. சிலருக்கு தமிழ்ல தட்டினாலும் புரியல, ஆங்கிலத்துல சொன்னாலும் புரியல. சில சின்ன விஷயங்களைச் சொன்னா, 'இது எனக்குத் தெரியாதா?' என்று கேள்வி கேட்டவருக்கே தோணலாம். :-) சொல்லலைன்னா அதை மிஸ் பண்ணிருறாங்க. எனக்குத் தட்டுறதுக்கு நேரம் கிடைச்சாலும் பல சமயங்களில் திரும்பப் படிச்சுப் பார்த்து எடிட் செய்ய நேரம் கிடைக்கிறது இல்லை.

எனக்கு உங்க மேல ரொம்ப கோவமா இருக்கு குட்டிப் பெண்ணே. போய்க் காட்டுங்க என்று சொல்லி இப்போ 2 நாள் ஆகிட்டு. இன்னும் போகல. பிடிவாதமா. 'இமா பதில் சொல்லுங்க,' என்று உங்க சந்தேகம்லாம் தீர்த்துட்டு போகலாம்னு நினைச்சா லேட் ஆகிராதா? சின்னதா இருக்கிற இன்ஃபெக்ஷனை உடனே கவனிக்காட்டா அதுவும் சிரமமான விஷயம் ஆகலாம்ல! சீரியஸா சொல்றேன். அடுத்த கேள்வி இங்க வைக்காம போய்க் காட்டுறீங்க. இல்லாம... பயமா இருக்கு, அதுவா இதுவா, பதில் சொல்லுங்கன்னு கேட்டீங்க... நிஜமாவே இங்க இருந்து குட்டிருவேன். பேரை நினைப்பு வைச்சிருந்து, பிறகு வரும் உங்க ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டேன். :-)

இப்ப இந்த ஒரு பதில் தட்டிட்டுப் போறேன். இன்று நாள் முழுக்க வேலை இருக்கு. இனி நாளைதான் இங்கு வரக் கிடைக்கும். ஆனா டாக்ட்டர்ட்ட போய் வந்து சொல்லும் வரைக்கும் உங்க எந்தக் கேள்விக்கும் நான் பதில் சொல்றதா இல்லை.

‍- இமா க்றிஸ்

கோச்சிக்காதீங்க இமா அம்மா. நான் நேற்று தான் ஹஸ்பிடலுக்கு போனேன்.ஆனால் நான் போன நேரம் டாக்டர் இல்லை. அவங்க எதோ பர்ஸ்னல் விஷயமா சொந்த ஊருக்கு போயிருக்காங்களாம். வர்ரதுக்கு 2 வாரம் ஆகுமாம். நான் நெக்ஸ்ட் வீக் மும்பை போறேன். அங்கதான் எனக்கு டெலிவரி ஆச்சு. அதனால் அந்த ஹஸ்பிட்டல்லயே காட்டலாம்னு இருக்கேன் .நான் இவ்வளவு ஹஸ்பிடலுக்கு போகாம இருந்ததுக்கு காரணம். இப்ப நோன்பு டைம் அதனால் தான் போக முடியல. ஈவ்னிங் போகலாம்னா என் ஹஸ்பெண்ட் வரவே நைட் 11 Mஅனி ஆகும்.அதனால நேத்து லீவு போட சொல்லி ஹஸ்பிட்டல்லயே போனேன் .அதுவும் இப்படி ஆயிடுச்சு.என் ஹஸ்பண்டும் என்னை திட்டினாரு. நீ மட்டும் முதல்லயே போயிட்டு வந்த டாக்டர் இல்லன்னு தெரிஞ்சிருக்கும் .இப்ப லீவு வேஸ்ட் ஆயிடுச்சுன்னு திட்டினாரு.அந்த கோபத்துல மொபைல தொடாம இருந்தேன் .இப்பதான் உங்க பதிவை பார்த்தேன்.நீங்களும் என்னை கோவிச்சிக்கிரிங்க. அப்ப நான் என்னதான் பண்றது.......சோதனை மேல் சோதனை போதுமடா சாமி....வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி.......:-( :-( :-(

கர்ப்ப பை இறங்கி இருந்தா ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் வெளிக்காட்டும் .இரத்தம் கசியிறது ,வலி , யூரின் போறப்ப ஏதோ தடை பண்ணுவதுபோல் உணர்வு மலசிக்கல் இப்படி ஏதாவது . அடுத்து குழந்தை வயிற்றில் இருக்கும்போது அல்லது சுகப்பிரசவம் கொடுத்தவர்களுக்கு தான் இது வருவதற்கு வாய்ப்பு அதிகம் .சிசேரியன் நீங்கள் சொல்லுமளவுக்கு பெரிதாக எடுத்து வலி வலி என்று வருஷ கணக்காக கொண்டாடும் அளவுக்கு கடுமையான விஷயம் கிடையாது. அவரவர் மன தைரியம் பொறுத்தது .

//நீங்களும் என்னை கோவிச்சிக்கிரிங்க.// :-) வேற என்ன செய்றது? யோசிக்காதீங்க, உங்களுக்கு ஒன்றும் இல்லை என்று நான் சொல்லி நீங்கள் கவனிக்காமல் விட்டு ஏதாவது ஆகினால் என் மேல் பழி வராதா? இப்பிடி ஏதாச்சும் எழுதினா உடனே வந்து ஆனா... என்று ஆரம்பிச்சு ஏதாவது சொல்லுவீங்க. :-)

//அப்ப நான் என்னதான் பண்றது.......சோதனை மேல் சோதனை போதுமடா சாமி....வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி.......:-( :-( :-(// நீங்க கேள்வி கேட்டீங்க. வேலை நடுவில் பதில் சொன்னேன். இப்ப நான்தான் இதைப் பாடணும். :-)) //என் ஹஸ்பண்டும் என்னை திட்டினாரு.// அதுக்கு நான் என்னங்க பண்றது!! அது உங்க பிரச்சினை. நான் உங்களைத் திட்டச் சொல்லல. :-)

நேற்றே எனக்குத் தோணிச்சு... உங்களுக்கு யூரின் இன்ஃபெக்ஷன் கூட இருக்கிற மாதிரி இல்லை. முடியாம இருந்திருந்தா திரும்ப வந்து இன்னும் ஏதாவது இரண்டு இயலாமை சொல்லியிருப்பீங்க. உண்மையில்... நீங்க இப்போ இருக்கிற விதத்தைப் பார்க்க... உங்களுக்கு ஒன்றுமே இல்லை என்று கூட எனக்குத் தோன்றுகிறது. நீங்க சும்மா யோசிக்கிறீங்களோன்னு தோணுது. இருந்தாலும் உங்களுக்குப் பயமாக இருந்தால் காட்டத்தான் வேணும்.

இந்தக் கேள்விக்குச் சம்பந்தமில்லாமல் ஒரு விஷயம் சொல்றேன். //ஹஸ்பிடலுக்கு போகாம இருந்ததுக்கு காரணம். இப்ப நோன்பு டைம்// & டாக்டர் லீவு என்கிறதையெல்லாம் காரணமாக எப்பவும் சொல்லக் கூடாது. எதற்காகவும் உடம்பு தன் வேலைகளை நாலு நாளைக்கு நிறுத்தி வைச்சுட்டுத் தொடராது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்