தக்காளி கார சட்னி

தேதி: July 6, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.3 (3 votes)

 

தக்காளி - 3
பூண்டு - 10 பல்
காய்ந்த மிளகாய் - 8
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வாணலியில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி பூண்டு மற்றும் காய்ந்த‌ மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பூண்டு, காய்ந்த மிளகாயுடன் தக்காளியை துண்டுகளாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
இந்த சட்னி மிகுந்த‌ காரத்துடன் இருக்கும். எனவே அரைத்த‌ பிறகு 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
கார‌சாரமான‌ சுவையான தக்காளி கார‌ சட்னி தயார். இட்லியுடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை திருத்தம் செய்து அழகாக‌ வெளியிட்ட‌ டீமிற்கு மிக்க‌ நன்றி.

எல்லாம் சில‌ காலம்.....

சட்னி சூப்பர், செய்து சாப்பிட்டாச்சு சும்மா செம காரம்,
நாங்க இதில் தக்காளி சேர்க்காமல் செய்வோம் , பூண்டு மிளகாய் சட்னி என சொல்வோம், சட்னியும் நல்லெண்ணையும் செம காமினேசன் 2 எக்ஸ்ட்ரா உள்ள போகும்.

இப்போ இந்த முறைலேயும் செய்தாச்சு.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

நன்றி சுபி. உஸ் கொட்டிட்டே சாப்டீங்களா? இதுல‌ நல்லெண்ணை கலக்கறதுதான் அருமையான‌ டேஸ்ட். நன்றி சுபி. நானும் அந்த‌ பூண்டு மிளகாய் சட்னி செய்து இருக்கேன். இட்லிக்கு அது தான் செம‌ காமினேஷன். அத‌ மிஞ்ச‌ எதும் இல்ல‌.

எல்லாம் சில‌ காலம்.....