தேதி: July 11, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பீன்ஸ் - அரை கிலோ
வெங்காயம் - ஒன்று
தனி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
உப்பு - தேவையான அளவு
வறுத்த வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அதனுடன் பெரிய துண்டாக சற்று சாய்வாக நறுக்கிய பீன்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும்.

2 நிமிடம் கழித்து திறந்து தனி மிளகாய் தூள் சேர்த்து கிளறி மீண்டும் மூடி போட்டு மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

பின்னர் ஒன்றும் பாதியுமாக அரைத்த வறுத்த வேர்க்கடலையை சேர்த்து கிளறி இறக்கவும்.

சுவையான வேர்க்கடலை பீன்ஸ் சப்ஜி தயார்.

Comments
பாலா
வேர்க்கடலை சேர்த்திருப்பது வித்தியாசமாயிருக்கு, கலர்ஃபுல் ரெசிப்பி பாலா
பாலா
வேர்கடலை சேர்த்து கொடுத்தா எனக்கு எல்லா காய்கறியும் பிடிக்கும் ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி டீம்
குறிப்பை அழகாக வெளியிட்ட டீமிற்கு மிக்க நன்றிகள்.
எல்லாம் சில காலம்.....
வாணி
நன்றி வாணி. டேஸ்டி & சத்தானதும் கூட.
எல்லாம் சில காலம்.....
வனி அக்கா
பீன்ஸும் உடம்புக்கு ரொம்ப நல்லது. பீன்ஸ் வாரத்தில் 2 முறையாவது நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது கூடுதல் தகவல்.
எல்லாம் சில காலம்.....