24 வயதில் கூட பிரியட்ஸ் நிக்குமா???????

தோழிகளே எனக்கு 24 வயது ஆகிறது...எனக்கு கடந்த 2 மாதமாக சரியாக பிரியட்ஸ் வரவில்லை...பிரியட்ஸ் ஆனால் ஒரு நாளில் முடிந்து விடுகிறது அதுவும் லைட் தான் படுகிறது...நான் என் தோழியிடம் சொன்னேன்.அவள் சொன்னால் மெனோபாஸ் வரும் போது அப்படி ஆகும் என்று சொல்கிறாள்...

//அவள் சொன்னால் மெனோபாஸ் வரும் போது அப்படி ஆகும் என்று சொல்கிறாள்...// கர்ர்ர்... உங்கள் தோழி கைனகாலஜிஸ்ட்டா! அப்படியானால் கூட சும்மா சொல்லாமல் ப்ளட் டெஸ்ட் எடுக்கச் சொல்லியிருப்பார். உங்கள் அம்மா / அத்தை என்ன சொன்னார்கள்!!

மெனோபோஸ் சமயம் மட்டும்தான் இப்படி ஆகும் என்பது இல்லை. வேறு சமயங்களிலும் ஆகும். இரண்டே இரண்டு மாதங்கள் ஒழுங்கில்லாமல் ஆனால் மெனோபோஸ் என்பது இல்லை. :-) அதுவும் வேறு எந்தச் சிரமங்கள் இருப்பதாகவும் நீங்கள் குறிப்பிடவில்லை. இங்கு எத்தனை சகோதரிகள் ஒழுங்கற்ற மாதவிடாய் பற்றிக் கேள்விகளை வைக்கிறார்கள் என்று பார்த்திருப்பீர்கள். இது பரவலாக பலருக்கும் உள்ள பிரச்சினைதான்.

தோழி சொன்னதை நம்பி, தயாராக இல்லாமல் வெளியே கிளம்ப வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் உடல் சரியான நிலைக்குத் திரும்பி தன் வேலைகளை ஆரம்பிக்கலாம். சங்கடப் பட்டுப் போவீர்கள். எப்பொழுதும் கைப்பையில் தேவையான பொருட்கள் தயாராக இருக்கட்டும்.

மணமானவர் நீங்கள். கர்ப்பமாகக் கூட இருக்கலாமே! கணவர் வேறு ஊரிலிருக்கிறார் அல்லது நீங்கள் கருத்தடை முறைகள் பயன்படுத்துகிறீர்கள் என்றால்... ஹோமோன் பிரச்சினையாக இருக்கலாம். அனீமிக்காக இருந்தாலும் இப்படி ஆகலாம். உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது குழம்பிக் கொள்வதை விட ஆரோக்கியத்திற்கு நல்லது.

‍- இமா க்றிஸ்

உங்களுக்கு தேவையற்ற‌ பயம்,
முதல் பூப்படைந்த‌ நாளில் இருந்தே இப்படி
உள்ளதா? உங்கள் அம்மாவுக்கு எப்படி இருந்தது என்று தெரியுமா?
தைராய்டு தொல்லை இருக்கிறதா?>>>>>>>>> இப்படி ஏதாவது இருந்தால் தான்
அப்படி ஓரிரு நாள்கள் மட்டுமே போக்கு இருக்கும்
இது மாதிரி என்னுடன் பணியாற்றிய‌ ஆசிரியைகளுக்கு இருந்தது,கிட்டத்தட்ட‌
முப்பது ஆண்டுகளாக‌ அதனுடனேயே பணியாற்றி பிள்ளைபெற்று வளர்த்து
கல்யாணமும் முடித்து இன்று பாட்டியாகவும் ஆகி விட்டார்கள்.
மணமான‌ நீங்கள் கருவுற்று இருக்கலாம். கருவுற்ற‌ சிலருக்கு நான்கு மாதம்
வரை கூட இப்படி இருப்பது உண்டு. உடனடியாக‌ ஒரு கைனகாலஜி மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளவும். மோட்டார் சைக்கிளில் செல்வதை நிறுத்தவும். மேடு பள்ளங்களில் ஏறி இறங்கிக் குதிக்கும்
அதிர்வினால் கருவுற்றிருந்தால் கரு கலைய‌ வாய்ப்புண்டு. கவனம் தேவை.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நான் கர்ப்பமாக இல்லை.அது நன்றாக தெரியும்.நிங்க சொன்னாது போல் எனது உடலில் தான் எதோ பிரச்சனை.என் கருப்பையில் இனி குழந்தை தாங்காது என்று எனக்கு முதல் குழந்தை பிறந்த போது டாக்டர் கூறி விட்டார்.எனது அம்மாவுக்கு 45 வயது வரை இருந்தது.எனது பாட்டிக்கு 21 வயதிலே நின்று விட்டது

அன்புள்ள‌ திவ்யா 24 வயது என்பது ஒரு வயதே அல்ல‌. வாழ்க்கையே
சிலருக்கு 30 க்கு மேல் தான் ஆரம்பிக்கிறது.
திருமணம் எப்போது ஆனது, முதல் குழந்தைக்கு இப்போது வயது என்ன‌?
கருப்பையில் இனி குழந்தை தங்காதா ( இனி குழந்தை பிறக்க‌ வாய்ப்பு இல்லையா?) இல்லை கருப்பை ‍‍‍‍‍‍‍______குழந்தையைத் தாங்கி பிரசவிக்க‌ போதிய‌
பலம் கருப்பைக்கு இல்லையா? இதற்குத் தெளிவான‌ பதில் இல்லை.
உங்கள் குறையைப் பற்றி டாக்டர் கூறியிருந்தால் அதற்கான‌ காரணம், தீர்வையும் சொல்லியிருப்பாரே.
என் உடலில் தான் ஏதோ பிரச்சினை// பிரச்சினையை சரி செய்யப் பாருங்கள்
நான் கேட்ட‌ மாதவிலக்கின் நாள் கணக்கைப் பற்றி நீங்கள் எதுவுமே கூறவில்லை
இருபது வயதுக்குள் மணமாகி குழந்தை பெற்ற‌ பெண்களில் பாதிப்பேர்
சரியான‌ உடல் வளம் இல்லாததால் இந்த‌ நிலைக்கு ஆளாவது உண்டு.
இழந்த‌ உடல் வளத்தினை மீண்டும் பெறுவதற்கு வேண்டிய‌ வழிகளும்,
மருத்துவமும் எவ்வளவோ இருக்கின்றன‌.
உங்களுக்கு பிரசவம் பார்த்த‌ மருத்துவரைப் பாருங்கள், அல்லது வேறு மகப்பேறு மருத்துவரை பழைய‌ மருத்துவ‌ அறிக்கைகளோடு சென்று பாருங்கள்.
உங்கள் கருப்பை சீர் பெற‌ உணவு முறைகள் நிறைய‌ உள்ளன‌. கருப்பை சீரானால் எல்லாமே சீராகும் குறை பலக் குறைவே காரணம் என்று அறிந்து
விட்டால் எப்படியும் நீக்கி விடலாம், சன் டி வி நாட்டு மருத்துவம் பாருங்கள்.
நலம் பெற‌ வாழ்த்துக்கள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நான் எழுதுவதற்கு அதிகம் எதுவும் இல்லை. நினைத்த அனைத்தையுமே பூங்கோதை எழுதியிருக்கிறார். அதற்கு மேல்...

//என் கருப்பையில் இனி குழந்தை தாங்காது என்று எனக்கு முதல் குழந்தை பிறந்த போது டாக்டர் கூறி விட்டார்.// தெளிவாக இல்லை இந்த வரி. 'தாங்காது' என்று சொல்லியிருந்தால்... 'த..ங்காது' என்று அர்த்தம் அல்ல. தங்காது & தாங்காது என்று இரண்டையும் சேர்த்துச் சொன்ன பின்னாலும் ஒரு குழந்தை கிடைத்தது எனக்கு. இப்போது 26 வயது. இது மருத்துவம் இன்னும் முன்னேறிய காலம்.

முதலில் உங்கள் உடல்நிலை பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் மெடிக்கல் ரிப்போட் இருக்குமே! அது என்ன சொல்கிறது! ஓவரியில் ஏதாவது பிரச்சினை இருந்ததா? இந்த மாதிரி விஷயங்களெல்லாம் தெரியாமல்... தெரிந்தாலும் கூட, நாங்கள் தீர்வு சொல்ல இயலாது திவ்யா.

//அம்மாவுக்கு 45 வயது வரை இருந்தது. எனது பாட்டிக்கு 21 வயதிலே நின்று விட்டது// அம்மா... சரிதான்.

ஆனால்... இப்படி ஒரு வரியில், பாட்டியை உங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். அவரது உடல் ஆரோக்கியம் அந்தக் காலத்தில் எப்படி இருந்தது என்பது உங்கள் அம்மாவுக்கே சரியாகத் தெரிந்திராது. பாட்டிக்கு எத்தனை வயது இப்போது! பலரது பிறப்புச் சாட்சிப் பத்திரங்களில் சரியான தேதி பதிவாகி இராது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். முன்பு ஒரு மருத்துவரிடம் வேலை பார்த்தேன். ஒரு பாட்டியிடம் வயதைக் கேட்க, 'வளவு மூலையிலிருக்கும் தேக்க மரத்தின் வயது,' என்றார். அவர்களால் சரியான தகவல் கொடுக்க முடியுமா! பலதையும் மறந்திருப்பார்கள். முன்பெல்லாம் மருத்துவர்களே நோயாளியின் நிலமையைச் சரியாகச் சொல்லாமல்தான் சிகிச்சை கொடுத்திருக்கிறார்கள் - மக்களுக்குப் புரியாமலிருந்த காரணத்தால். பாட்டிக்கு பிரசவத்தின் போது ஏதாவது சிக்கலாகி அதன் காரணமாக கருப்பை நீக்கம் செய்திருக்கக் கூடும். அப்படியானால் மாதவிலக்கு ஆகாமலிருக்கும். அதை மெனோபோஸ் என்று நீங்கள் கணக்கெடுக்க முடியாது. பாட்டியை விடுங்கள்.

உங்கள் மெடிக்கல் ரிப்போர்ட்டுடன் ஒரு தடவை உங்கள் மருத்துவரைச் சந்தித்து சந்தேகங்கள் எல்லாவற்றையும் தீர்த்துக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்