தேதி: July 13, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மட்டன் - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 3 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தாளிக்க :
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 2
அரைக்க 1 :
தேங்காய் - 2 துண்டு
கசகசா - ஒரு தேக்கரண்டி
அரைக்க 2 :
புதினா, கொத்தமல்லி - தலா அரை கட்டு
பச்சை மிளகாய் - 2
குக்கரில் மட்டனுடன் மஞ்சள் தூள், ஒரு பிரிஞ்சி இலை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி குழைய வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.

அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கலவை கொதித்ததும் தீயை மிதமாக வைத்து அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.

கொதித்ததும் வேக வைத்த மட்டனை சேர்த்து உப்பு போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.

மட்டனுடன் சேர்ந்து நன்கு கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் புதினா விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.

குருமா கெட்டியானதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

சுவையான மட்டன் நீல்கிரி குருமா தயார்.

Comments
மட்டன் நீல்கிரி
மட்டன் நீல்கிரி நல்லாயிருக்கு ரேவதி, நாங்க இத்துடன் முந்திரி விழுதும் சேர்ப்பதுண்டு :))
ரேவ்ஸ்
அக்கா சூப்பருக்கா!!! அப்படியே இன்னைக்கு காலையில் ஆப்பத்துக்கு கொடுத்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்!!! மிஸ் பண்ணிட்டனே!!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா