என் 1 1/2 வயது மகன் சாப்பிடவெ மாட்டேன்கிறான். சில நேரஙலில் துப்புகிறான். தண்ணீர் மட்டும் குடிகிறான். ஏற்கனவே அவன் 8.500 கிலோ தான் இருக்கிறான். இப்பொழுது 7 கிலோ. நான் வேலைக்கு வந்து விடுகிறென். காலையில் சத்துமாவு கஞ்சி கொடுப்பேன். இன்று குடிக்காமல் ரொம்ப அடம் பிடித்தான். நான் நன்றாக அடித்து விட்டென். ஆனால் வேலைக்கு வந்ததும் இப்படி அடித்து விட்டோமே என்ட்ரு மிகவும் சங்கடமாக உள்ளது. நான் அவனுக்கு 7 மணிக்கு கஞ்சி, 8.30 இட்லி, கொடுத்து விட்டு சென்று விடுவென். பகலில் ஒரு தரம் மட்டும் கொஞ்சம் சாதம் சாப்பிடுகிறான். நான் திரும்பவும் 6 மணிக்கு சென்று பால் கொடுப்பேன் 8 மனிக்கு சாதம் அவ்வளவு தான். வேறு என்ன கொடுப்பது? வேலையே செய்ய முடியவில்லை அவனை அடித்தது மன உறுத்தலாக உள்ளது உதவுஙள்
எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். சாப்பிடாததற்க்காக எப்போதும் அடிக்காதிர்கள். அது ஒரு எதிர்மறை விளைவை ஏற்படுத்திவிடும். சாப்பிடுவது என்றாலே பயப்பட ஆரம்பித்துவிடும். முட்டை சாப்பிடுவாரா? ஆம் என்றால் அதை குடுத்து பாருங்கள். பொதுவாக குழந்தைகள் நாம் செய்கிறதை செய்ய விரும்புவார்கள். என் வீட்டில் பல சமயம், குழந்தைகளுக்கு ஊட்டிய போது துப்பிய அதே உண்வை, நான் சாப்பிடும் போது வந்து வாயில் வாங்கி கொள்வதை பார்த்திருக்கிறேன். ஒரு வயது ஆனதிலிருந்து எங்கள் வீட்டில் நாங்கள் சாப்பிடுவதைதான் அவர்களுக்கும் கொடுக்கிறோம். தனி சமையல் இல்லை. முயற்சி செய்து பாருங்கள்.
eanakum ithey pblm than
eanakum ithey pblm than sisters kobathai adaka mudiya villai muyarchikuren
அன்புள்ள சங்கீதா
நீங்கள் வேலைக்குச் செல்லும் போது யாரிடம் விட்டுச் செல்கிறீர்கள்.
காலை ஏழு மணிக்கு சத்துமாவு கஞ்சி இது ஜீரணமாக எத்தனை மணி ஆகும்?
அடுத்து எட்டரை மணிக்கு இட்லி ஒன்றரை மணி இடைவெளியில். ஒரு
ஜீரணிப்பதற்கு கடினமான கஞ்சி இது சீரணமாக குறைந்தது இரண்டரை மணி
நேரமாவது ஆகாதா? கஞ்சி பிடிக்காமல் இட்லி பிடித்திருக்கலாம். அதைப் பேசத்
தெரியாத குழ்ந்தை கஞ்சியை மறுப்பது இயல்பே. அதனால் துப்புவது இயற்கை.
பகலில் சாதம் குழந்தைக்கு யார் ஊட்டுகிறார்களோ அவர்களையே கஞ்சி குடித்த
பின் எப்போது குழந்தைக்கு பசிக்கிறதோ அப்போது இட்லியை ஊட்டச் சொல்லலாமே. அதை விடுத்து உங்கள் வசதிக்கு ஏற்ப குழந்தையைச்
சாப்பிட வைக்க முயற்சிப்பது மிகத் தவறான செயல். ஒன்றரை வயதுக் குழந்தையின் வயிறு வயிறா? வண்ணான் சாலா?
எட்டரை மணிக்குப் பிறகுமதியம் 12 அல்லது 1 என்றால் ஏறக் குறைய
நான்கு மணி நேரம் இடைவெளி அடுத்து ஆறு மணிக்குப் பால் இடைவெளி
கிட்டதட்ட ஐந்து மணி நேரம். ஆக மதியம் ஒரு மணிக்குப் பிறகு எட்டு மணிக்கு சாதம். இரண்டு திட உணவுகளுக்கிடையே ஏழு மணி நேர இடைவெளியை வளர்ந்த நம்மாலேயே பசி தாங்க முடியாதே இந்த முறை சரியா? சற்று யோசியுங்கள்.
பிறகு குழந்தையை மிரட்டலாம், அடிக்கலாம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
அன்பு பூங்கோதை
என் குழந்தையை என் மாமனார் பார்த்து கொள்கிறார். அவர் இரவு செக்யூரிட்டி வேலைக்கு செல்கிறார். பகலில் என் குழந்தையை பார்த்து கொள்கிறார். அதனால் அவர் பகலில் சரியான சாப்படு கொடுப்பதில்லை அதனால் தான் நான் இவ்வளவும் கொடுத்து விட்டு வருகிறென்
சங்கீதா
அன்பு சங்கீதா நிச்சயம் உங்க மாமனாரால் சிறு குழந்தையை பராமரிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். அதுவும் இரவு வேலைக்கும் சென்று விட்டு, தூங்கும் நேரத்தில் குழந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வது என்பது இயலாத ஒன்றுதான். உங்கள் அலுவலகத்திற்கு அருகில் டேகேர் எதுவும் இருந்தால் பார்க்கலாமே. உங்களுக்கும் மனநிம்மதி. குழந்தைக்கும் சரியான நேரத்திற்கு உணவு கொடுப்பார்கள்தானே!! காலையில் அவ்வளவையும் ஒரே நேரத்தில் கொடுப்பதால் குழந்தைக்கு கஷ்டமாகத்தானே இருக்கும். இப்பொழுது இருக்கும் நிலையில் இருந்து வேறு ஏதேனும் மாற்றுவழி இருக்கிறதாவென யோசியுங்கள் தோழி.
வெற்றி பெற்ற பின், தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன், இரண்டாம் முறை வென்ற மனிதனாவான்.
என்றும் அன்புடன்
சிவிஸ்ரீ
sivisri
அது கஷ்டம் என யெனக்கு புரிகிறது. நானும் நீங்கள் கூறிய வழிகளில் முயற்ச்சி செய்து விட்டென். அது எதுவும் சரி வரவில்லை அதனால் தான் என் மாமனார் வீட்டிலெயெ பார்த்து கொள்கிறென் என்றதால் விட்டு வந்தென். மாலை வேளையில் என்ன கொடுகலம் என கூறுஙள்